ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜேவாக பணியாற்றியதன் மூலம் பிரபலம் ஆனவர் செந்தில். இவருக்கு ரேடியோவில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை ஏற்று விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்கிற சீரியலில் ஹீரோவாக நடித்தார் செந்தில். அந்த சீரியலில் செந்திலுக்கு ஜோடியாக ஸ்ரீஜா நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி தான் அந்த சீரியலை சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்கியது.
24
Mirchi Senthil Family
சீரியலில் மட்டுமின்றி நிஜத்திலும் இவர்கள் இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதால் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்து வருகிறார் மிர்ச்சி செந்தில். தற்போது அவர் நடிப்பில் அண்ணா என்கிற சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நித்யா ராம் நடித்துள்ளார். இந்த சீரியல் டிஆர்பியிலும் பட்டைய கிளப்பி வருகிறது.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் ஆன்லைன் மோசடியில் சிக்கியதாக மிர்ச்சி சிவா வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். அதில் தான் 15 ஆயிரத்தை இழந்ததாக அவர் கூறி இருந்தார். மேலும் இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகாரும் அளித்திருந்தார். இந்நிலையில், தான் புதிதாக பிசினஸ் தொடங்கி இருக்கும் தகவலையும் சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார். அது என்ன பிசினஸ் என்பதை பார்க்கலாம்.
44
Mirchi Senthil Wife Sreeja
அதன்படி கஃபே பிசினஸில் தான் காலடி எடுத்து வைத்துள்ளாராம் மிர்ச்சி செந்தில். கேரளாவில் கஃபே பிசினஸ் நடத்தி வந்த ஒருவர் அதனை தொடர்ந்து நடத்த முடியாததால் விற்க முன்வந்தாராம். அப்போது செந்திலின் மனைவி ஸ்ரீஜா நாம ஏன் அந்த பிசினஸை எடுத்து நடத்தக் கூடாது என ஐடியா கொடுக்க, அதற்கு செந்திலும் ஓகே சொல்லிவிட்டாராம். தற்போது ஸ்ரீஜாவும், செந்திலும் அந்த பிசினஸை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்களாம். பிசினஸிற்காக அடிக்கடி கேரளா சென்று வருவதால் பிசியாக உள்ளதாக செந்தில் கூறி உள்ளார்.