ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் 'கார்த்திகை தீபம் 2'. திங்கள் முதல் சனி கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், கடந்த சனிக்கிழமை அன்று ரேவதிக்கு ஆப்பரேஷன் நடக்க தொடங்கிய நிலையில் இன்று ரேவதிக்கு ஆபரேஷன் நல்லபடியாக நடந்து முடிகிறது. இதைத் தொடர்ந்து டாக்டர் ரேவதிக்கு இனி எந்த ஆபத்தும் கிடையாது என மகிழ்ச்சியான தகவலை கூறினாலும், இன்னும் அவர் கண் விழிக்கவில்லை என கூறுவதால் அனைவரும் மீண்டும் பதற்றம் அடைகிறார்கள்.
24
காதலை வெளிப்படுத்தும் கார்த்திக்:
பிறகு கார்த்திக் ரேவதி பக்கத்தில் அமர்ந்து எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் ரேவதி என்று சொல்ல ரேவதி சந்தோஷத்தில் கண் திறக்கிறாள். என்னுடைய சவாலில் நான் ஜெயித்து விட்டேன் என்று சொல்கிறாள். மறுபக்கம் மாயா வீட்டுக்கு வர காளியம்மா அந்த ரேவதி இன்னும் சாகல உயிரோட தான் இருக்கா என்று சொல்ல மாயா நான் என்னென்னமோ திட்டம் போட்டேன் ஆனா கார்த்தி எல்லாத்தையும் தவிடு பொடியாக்கிட்டான் என புலம்புகிறார்.
பிறகு சிவனாண்டி முத்துவேல் ஆகியோர் கொஞ்ச நாளைக்கு கார்த்திக் கிட்ட உஷாரா தான் இருக்கணும். நம்ம மேல கொல காண்டில் இருப்பான் என்று பேசிக்கொள்கிறார்கள். பிறகு அங்கு வந்த கார்த்திக் இருவரையும் அடி வெளுத்தெடுத்து அவர்களை வைத்து மாயாவை அங்கு வர வரவைக்க பிளான் போட்ட நிலையில், மாயாவை போலீசாரும் கைது செய்கிறார்கள்.
பிறகு காளியம்மா சிவனாண்டி மற்றும் அங்கிருந்த ஆட்களை எல்லாம் பார்த்து நீங்கள் எல்லாம் ஒரு ஆம்பளையா என்று அசிங்கப்படுத்துகிறாள். அடுத்ததாக சாமுண்டீஸ்வரியை கார்த்திக்கு எதிராக மாற்ற வேண்டும் என்று திட்டம் போடுகிறார்கள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது பற்றி வரும் எபிசோடுகள் மூலம் தெரிந்து கொள்வோம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.