Anna Serial: வைஜெயந்திக்கு ஆப்பு ; சாட்சி சொல்ல வந்த முருகன் சிலை - அண்ணா சீரியல் அப்டேட்!

Published : Sep 29, 2025, 06:34 PM IST

Anna Serial Today Episode : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில், அடுத்த நாள் விசாரணைக்கு தயாரான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

PREV
15
கண் கலங்கி அழும் ரத்னா:

அதாவது, அடுத்த நாள் கோர்ட்டில் வாதாடுவதற்காக சண்முகம் நோட்ஸ் எடுத்துக் கொண்டிருக்க, ரத்னா நாளைக்கு எப்படியாவது அறிவழகனை காப்பாற்றிடு அண்ணே என்று கண் கலங்கி அழுகிறாள். சண்முகம் அதுக்காக தான் போராடுக்கிட்டு இருக்கேன்.. கண்டிப்பா அறிவழகனை காப்பாத்திடலாம் நீ கண் கலங்காத என்று சொல்கிறான்.

25
வைஜந்தியை தயார் படுத்தும் சிவனாண்டி:

மறுபக்கம் வைஜயந்தி ஆட்களை ஏற்பாடு செய்து, நாளைக்கு சண்முகம் கோர்ட்டுக்கு வரக்கூடாது.. அவனை அடிச்சு தூக்கிடுங்க என்று ஆர்டர் போடுகிறாள். மேலும் சிவனாண்டி வைஜெயந்தியிடம் நான் சொல்ற மாதிரி எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லுங்க என்று வைஜயந்தியை தயார் படுத்துகிறான்.

35
வைஜெயந்தியின் திட்டம் தோல்வி:

அடுத்த நாள் சண்முகம் குடும்பத்தினர் எல்லோரும் கோர்ட்டுக்குக் கிளம்ப சண்முகம், பரணி வண்டியில் கிளம்ப ரவுடிகள் அவனை அடித்து தூக்க தயார் நிலையில் இருக்கின்றனர். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக சண்முகத்தின் பைக் டயர் வெடிக்க பிறகு எல்லோரும் ஒன்றாக காரின் சென்று விடுகின்றனர். இதனால் வைஜெயந்தியின் திட்டம் தோல்வியில் முடிகிறது.

இன்பன் உதயநிதி வெளியிடும் முதல் படத்துக்கே இந்த நிலைமையா? முன்பதிவில் காத்துவாங்கும் இட்லி கடை..!

45
சாட்சி சொல்ல வரும் முருகன்:

பிறகு சண்முகம் வைஜெயந்தியை கூண்டில் நிற்க வைத்து விசாரிக்க தொடங்குகிறான். அடுத்ததாக வைஜெயந்திக்கு எதிராக தீர்ப்பு சொல்ல முருகன் சிலை இருப்பதாக சொல்ல, சிவனாண்டி சிலை எப்படி சாட்சி சொல்லும் என்று நக்கல் செய்கிறான். பிறகு சண்முகம் வைஜெயந்தி வீட்டில் வைத்து பூஜை செய்த முருகன் சிலையை கொண்டு வருகிறான்.

கைது செய்யப்படும் மாயா - கார்த்திக்கு எதிராக போடப்படும் பிளான் என்ன? கார்த்திகை தீபம் 2 அப்டேட்!

55
அதிரவைக்கும் வீடியோ ஆதாரங்கள்:

அந்த முருகன் சிலையில் கேமரா மைக் என எல்லாம் இருப்பதையும் கூடவே ஒரு பென்டிரைவ் கனெக்ட் செய்யப்பட்டிருப்பதையும் சொல்லும் சண்முகம்... அதை வெளியே எடுத்து நீதிபதியிடம் ஒப்படைக்க அதிலிருந்து வீடியோ ஆதாரங்களை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை தொடர்ந்து பாருங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories