
தன்னுடைய 16 வயதில் 'அரவிந்தன்' என்கிற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் ஷங்கர் ராஜா. இந்த படத்தை நாகராஜன் என்பவர் இயக்க, டி சிவா தயாரித்திருந்தார். மேலும் இந்த படத்தில் சரத்குமார், பார்த்திபன், நக்மா, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் 16 வயதே ஆகும் டீன் ஏஜ் பாய் என்பதால், 'அரவிந்தன்' படத்தின் தயாரிப்பாளர்... இப்படத்தின் குறிப்பிட்ட ஒரு காட்சியை மட்டும் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு கூறி அதற்கு இசையமைக்கும் படி கூறியுள்ளார். யுவன் போட்ட இசையால் ஈர்க்கப்பட்ட தயாரிப்பாளர் டி.சிவா இந்த முழு படத்தின் இசையையும் இசையமைக்கும் பொறுப்பை அவருக்கு கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து வேலை, கல்யாண கலாட்டா, பூவெல்லாம் கேட்டுப்பார், உனக்காக எல்லாம் உனக்காக, என அடுத்தடுத்து பல படங்களில் இசையமைத்தார். குறிப்பா இவர் இசையில் 2000-ஆம் ஆண்டு, அஜித் நடிப்பில் வெளியான 'தீனா' திரைப்படத்தில் இவருடைய இசையில் வெளியான பாடல்கள் மட்டுமின்றி, BGM மியூசிக்கும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. 2002, ஆண்டு மிகவும் பிஸியான இசையமைப்பாளராக மாறிய யுவன் சங்கர் ராஜா, சில தெலுங்கு திரைப்படங்களுக்கும் இசையமைக்க துவங்கினார். மேலும் ஒரே வருடத்தில் சுமார் 10 படங்களுக்கு அடுத்தடுத்து இசையமைக்கும் பிஸியான இசையமைப்பாளராகவும் மாறினார் யுவன்.
பாக்யராஜ் மகள் சரண்யாவுக்கு குழந்தை இருக்கா; கணவர் யார்? கொண்டாட்டத்தில் இருக்கும் குடும்பத்தினர்!
யுவன் சங்கர் ராஜாவின் அண்ணன், கார்த்திக் ராஜா இசையமைப்பாளராக பணியாற்றிய படங்கள் மிகப் பெரிய அளவில் பேசப்படாவிட்டாலும்... இளையராஜாவின் இசை வாரிசு இவர்தான் என யுவன் சங்கர் ராஜாவை பிரபலங்களும், ரசிகர்களும் புகழ்ந்து தள்ளினர். மேலும் இதுவரை செல்வராகவன், அமீர், விஷ்ணுவரதன், வெங்கட் பிரபு, ராம், லிங்குசாமி, என பல இயக்குநர்களுடனும்... வாலி, நா முத்துக்குமார், மதன் காக்கி, வைரமுத்து, கபிலன், போன்ற பல பாடல் ஆசிரியர்களுடனும் யுவன் ஷங்கர் ராஜா பணியாற்றியுள்ளார்.
தன்னுடைய இசைக்காக பல விருதுகளை வென்றுள்ள யுவன்... பியார் பிரேமா காதல், மாமனிதன், பொன் ஒன்று கண்டேன், உள்ளிட்ட சில படங்களை தயாரித்தும் உள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் திரையுலக வாழ்க்கை வெற்றிகரமானது என்றாலும், இவருடைய பர்சனல் வாழ்க்கை பல சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதது என கூறலாம்.
இவர் சுஜையா சந்திரன் என்கிற பெண்ணை காதலித்து, 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், மூன்றே வருடத்தில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இதை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ஷில்பா மோகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மூன்றில் வருடத்தில் யுவன் சங்கர் ராஜாவை விவாகரத்து பெற வைத்தது.
இதைத்தொடர்ந்து இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்திற்கு யுவன் சங்கர் ராஜா மாறினார். இது இளையராஜாவுக்கு பிடிக்கவில்லை என அப்போது பல தகவல்கள் வெளியானது. மதம் மாறிய ஒரே வருடத்தில், அதாவது 2015 ஆம் ஆண்டு யுவன் சப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி சுமார் 9 வருடங்கள் ஆகும் நிலையில், யுவன் சங்கர் ராஜாவுக்கு அழகிய மகள் ஒருவரும் உள்ளார். இவர்தான் இளையராஜாவின் செல்லப் பேத்தியாக தற்போது உள்ளார்.
அட நம்புங்கப்பா.. நடிகர் சூர்யா சொந்த குரலில் இத்தனை பாடல்களை பாடியிருக்காராம்!
சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா கொடுத்த பேட்டி ஒன்றில், தந்தை இளையராஜா ஏன் தன்னுடைய திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என்கிற காரணத்தை கூறியுள்ளார். இதுகுறித்து யுவன் ஷங்கர் ராஜா பேசும் போது, என்னுடைய திருமணம் திடீரென்று என்று தான் முடிவு செய்யப்பட்டது. நான் ஊருக்கு போயிருந்த சமயத்தில் அடுத்த நாளே திருமணம் நடத்தி முடித்து விடலாம் என முடிவு செய்துவிட்டனர். அதற்கான ஏற்பாடுகள் அடுத்தடுத்து துவங்கியது. அப்போது என்னுடைய அப்பாவுக்கு போன் செய்து இது குறித்து சொன்னேன். அதற்காக நான் வருவேன் அது பிரச்சனை இல்லை. ஆனால் நான் வந்தால் எனக்காக ஏதாவது செய்ய வேண்டும் என அவர்கள் நினைப்பார்கள். எனவே நான் வந்து அவர்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை எனக் கூறி திருமணத்திற்கு வர மறுத்து விட்டாராம் இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.