
'சிகப்பு ரோஜாக்கள்' திரைப்படத்தில் எழுத்தாளராகவும், ஒரு சிறு கதாபாத்திரத்திலும் கேமியோ ரோலில் நடித்தவர் பாக்யராஜ். இதைத்தொடர்ந்து 'புதிய வார்ப்புகள்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாக்யராஜை ஹீரோவாக பிரபலப்படுத்திய நிலையில், 'சுவரில்லா சித்திரங்கள்' திரைப்படத்தை இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடித்து கவனம் ஈர்த்தார்.
முதல் படத்திலேயே திறமையான இயக்குனர் என்பதை நிரூபித்த பாக்யராஜ், 1980 களில், இயக்கி - நடித்த 'ஒரு கை ஓசை', 'மௌன கீதங்கள்', 'இன்று போய் நாளை வா', 'விடியும் வரை காத்திரு' போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன.
நடிகை பிரவீனாவை உயிருக்கு உயிராக காதலித்து 1981 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் பாக்யராஜ். ஆனால் எதிர்பாராத விதமாக, பிரவீனா 1983 ஆம் ஆண்டு மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து நடிகை பூர்ணிமா ஜெயராம், பாக்யராஜ் படங்களில் நடித்த போது... இவர் முதல் மனைவி மீது வைத்திருந்த அன்பை பார்த்து... காதல் வயப்பட்டார். ஆரம்பத்தில் பூர்ணிமாவை திருமணம் செய்து கொள்ள பாக்யராஜ் மறுத்தாலும், பின்னர் குடும்பத்தினர் பேச்சுக்கு கட்டுப்பட்டு இருவரும் 1894-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
அட நம்புங்கப்பா.. நடிகர் சூர்யா சொந்த குரலில் இத்தனை பாடல்களை பாடியிருக்காராம்!
கடந்த 40 வருடங்களாக, திரையுலகம் மெச்சும் ஒற்றுமையான நட்சத்திர தம்பதிகளாக இருக்கும் பாக்யராஜ் - பூர்ணிமா ஜோடிக்கு சாந்தனு என்கிற மகனும், சரண்யா என்கிற மகளும் உள்ளனர்.
நடிகர் சாந்தனுக்கு பிரபல தொகுப்பாளினியும், டான்சருமான கீர்த்தி என்பவரை காதலித்து 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் பாக்யராஜின் மூத்த மகளான சரண்யா, திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம், காதல் தோல்வி என கூறப்பட்டது.
மேலும் காதல் தோல்வியால் மூன்று முறை சரண்யா தற்கொலைக்கு முயன்றதாகவும் சில தகவல்கள் வெளியாகின. ஆனால் இது குறித்து பாக்யராஜ் தரப்பில் இருந்தோ, அல்லது சரண்யாவோ எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை. சரண்யா ஆஸ்திரேலியாவை சேர்ந்த தமிழர் ஒருவரை காதலித்ததாகவும், அந்த காதல் தோல்வியினால் தான் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாகவே பாரிஜாதம் படத்திற்கு பின்னர் இவர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின.
ஆனால் சுமார் 18 வருடங்களுக்கு பின்னர் மீண்டும், மீடியாவில் முகம் காட்டியுள்ளார் சரண்யா. இவர் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் தன்னை பற்றிய பல தகவலைகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த பாடல்களை எல்லாம் எழுதியவர் கங்கை அமரனா! இவ்வளவு தான் தெரியாம போச்சே?
இந்த பேட்டியில் தன்னுடைய தம்பியும், நடிகருமான சாந்தனுவுடன் தனக்கு இருக்கும் கியூட் பாண்டிங் பற்றியும் சரண்யா கூறியுள்ளார். "பொதுவாக இருவருமே ஒருவர் மீது மற்றொருவர் அன்பு வைத்திருந்தாலும், அதை வெளியில் காட்டி கொள்ள மாட்டார்களாம். எந்நேரமும் சண்டை போட்டு கொண்டு தான் இருப்பார்களாம். அதே நேரம் சாந்தனுவின் திரைப்படம் குறித்து தன்னுடைய கருத்தை சரண்யா கூறும் போது... எந்த ஒரு சுகர் கோட்டிங்கும் இல்லாமல் வெளிப்படையாக விமர்சனத்தை கூறி விடுவாராம். சமீபத்தில் அவர் நடித்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருடைய படம் நன்றாக வரவில்லை என்றால்... என்னை பார்க்கும் போதே தலையை குனிந்து கொள்வார். சில சமயங்களில் அவருக்கு வரும் கதைகளை என்னையும் கேட்க சொல்லுவார் என தெரிவித்துள்ளார்.
அதேபோல் முதல் முறையாக தனக்கு குழந்தை இருப்பதை உறுதி செய்துள்ள சரண்யா பாக்யராஜ், குழந்தையையும் பார்த்துக் கொண்டு தன்னுடைய காஸ்டியூம் டிசைனர் வேலையும் பார்ப்பது மிகவும் கடினமாக உள்ளது என்றும், தன்னுடைய அம்மா எப்படி சிரமப்பட்டிருப்பர் என்பது இப்போதுதான் புரிகிறது. ஆனால் தன்னுடைய குடும்பத்தினர், அனைத்து விஷயங்களிலும் தனக்கு மிகவும் சப்போர்ட்டாக இருப்பதாகவும்... இதனால் புதிய தாயாக இருந்தாலும், தனக்கான ஸ்பேஸ், தூங்கும் நேரம் போன்றவை கிடைப்பதாக சரண்யா பேசி உள்ளார்.
பொதுவாகவே குழந்தை பிறந்த பின்னர், வேறு ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவது புதிய தாய்மார்களின் ஸ்ட்ரெஸை ஓரளவுக்கு குறைக்கும் என்பது போல் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார் சரண்யா.
மஞ்சள் வீரன் படத்தில் TTF வாசனுக்கு பதிலாக களமிறங்கிய பிக்பாஸ் பிரபலம்!
குழந்தையை வைத்துக்கொண்டு வேலை செய்வதால், சில சமயம் குழந்தையை பார்த்துக் கொள்ள முடியவில்லையே? என கில்டினஸ் தோன்றுமா? என தொகுப்பாளர் கேட்டபோது... அது நான் வெளியில் செல்லும்போது மட்டுமல்ல, மூன்றாவது மாடியில் இருந்து நான்காவது ப்ளோருக்கு சென்று என்னுடைய கஸ்டமர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது கூட அந்த எண்ணம் வரும். சில சமயத்தில் வீட்டில் இருப்பவர்கள் போன் செய்து, குழந்தை அழுவதாக கூறினால் கஸ்டமரிடம் பேசக்கூட முடியாது. தன்னுடைய மைண்ட் முழுக்க குழந்தை அழுவது மேல் தான் இருக்கும். எனவே நீங்கள் பார்த்துக் கொண்டே இருங்கள் ஒரு பத்து நிமிஷம் நான் போயிட்டு வந்து விடுகிறேன் என கூறிவிட்டு குழந்தையை சென்று பார்ப்பேன்.
சரண்யாவின் ஹேண்ட் பேக் குறித்து தொகுப்பாளர் கேள்வி எழுப்பிய போது... என்னிடம் ஹேண்ட் பேக் கிடையாது. பாப்பாவின் டயப்பர் பேக் மட்டும் தான் என் கையில் இப்போதைக்கு உள்ளது. அதில் வேசிலின் மற்றும் தலைவலி தைலம் மட்டுமே என்னுடையது இருக்கும். மற்றபடி பாப்பாவுக்கு தேவையான டிரஸ், பேம்பர்ஸ், பாட்டில்ஸ் போன்றவை தான் அதில் உள்ளது. என ஒரு புதிய தாயின் சந்தோஷங்களை பகிர்ந்துள்ளார்.
அதேபோல் சரண்யாவின் குழந்தை தான் தற்போது ஒட்டுமொத்த குடும்பத்தையும் மகிழ்ச்சியாக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சரண்யாவுக்கு எப்போது திருமணமானது? அவருடைய கணவர் யார் என்கிற கேள்விகளுக்கு மட்டும் இதுவரை விடை கிடைக்கவில்லை. ஒரு சிலர் சரண்யா குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறாரா? என்கிற கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பாவாக போகும் சன் டிவி சீரியல் ஹீரோ! மனைவியின் 5 மாத பேபி ஷவர் போட்டோசை பகிர்ந்த கார்த்தி!