Youtuber Irfan Baby Name : யூடியூப்பர் இர்பான் அண்மையில் பெண் குழந்தைக்கு தந்தையான நிலையில், அவர் தனது மகளின் பெயர் என்ன என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சக்சஸ்ஃபுல் யூடியூபராக வலம் வந்த இர்பான் சமீபகாலமாக சர்ச்சைக்குரிய யூடியூபராக மாறி இருக்கிறார். அடிக்கடி யூடியூப்பில் சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவிட்டு வருவதால் இர்பானை சுற்றி சர்ச்சைகளும் வட்டமடித்து வருகின்றன. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடும்பத்தினருடன் துபாய் சென்றிருந்த இர்பான், அங்கு கர்ப்பமாக இருக்கும் தனது மனைவிக்கு டெஸ்ட் எடுத்து பிறக்கபோகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை யூடியூப்பில் வீடியோவாக வெளியிட்டார்.
24
Mohamed Irfan
இந்தியாவில் அது சட்டவிரோத செயல் என்றாலும் அவர் துபாய் சென்று அந்த வீடியோ எடுத்து வெளியிட்டதால் அவர் மீது ஆக்ஷன் எதுவும் எடுக்கப்படவில்லை. இருப்பினும் அந்த வீடியோ சர்ச்சை ஆனதால் அதை தன் யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கிய இர்பான், தன்னுடைய மெமரீஸ்-காக அந்த வீடியோவை எடுத்ததாகவும் இனி இதுபோன்று தவறை செய்ய மாட்டேன் எனவும் இர்பான் கூறி இருந்தார். ஆனால் தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் அவர் சிக்கி இருக்கிறார்.
அதன்படி அவரது மனைவி ஆசிஃபாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறந்து மூன்று மாதங்களாக வெளியில் காட்டாமல் வைத்திருந்த இர்பான் கடந்த வாரம் தன் குழந்தை பிறந்த போது எடுத்த வீடியோவை வெளியிட்டார். அதில் மருத்துவமனை பிரசவ வார்டு உள்ளேயே கேமரா கொண்டு சென்றது மட்டுமின்று, குழந்தை பிறந்த உடனே அதன் தொப்புள் கொடியை தன் கையால் வெட்டியதையும் வீடியோவாக வெளியிட்டு இருந்தார்.
44
Youtuber Irfan Baby Name Ifa
அது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இர்பானின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில், அவர் மீது நிச்சயம் ஆக்ஷன் எடுக்கப்படும் என்று அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதன் முதல் கட்டமாக இர்பான் வீடியோ எடுத்த மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்ய தடை விதித்து ஊரக நலப்பணித்துறை இயக்ககம் உத்தரவிட்டது. இந்த சர்ச்சையெல்லாம் ஒருபுறம் இருக்க தன் குழந்தைக்கு பெயர் சூட்டிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் இர்பான்.
அதன்படி அவர் தன்னுடைய குழந்தைக்கு Ifa என பெயரிட்டு உள்ளார். ஐஃபா என்றால் Richness என்று அர்த்தமாம். அதாவது தமிழில் மதிப்புமிக்க என்று பொருள். இதைப்பார்த்த ரசிகர்கள் குழந்தையின் பெயர் ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஆக இருப்பதாக இர்பானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.