நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் முதல்முறையாக இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள 'யூத்' படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
தமிழ் இளம் நடிகர் கென் கருணாஸ், முதல்முறையாக இயக்கி, ஹீரோவாகவும் நடித்துள்ள 'யூத்' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படம் முழுக்க முழுக்க இளசுகளின் கொண்டாட்டமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பள்ளி, கல்லூரி காலத்து நினைவுகள், காதல், நட்பு, அதோடு குடும்ப உறவுகளின் எமோஷன்ஸ் என அனைத்தும் கலந்த ஒரு பக்கா ஃபன் பேக்கேஜாக இந்தப் படம் வந்துள்ளது.
25
வரவேற்பை பெறும் யூத்
தமிழ்நாட்டில் இந்தப் படத்துக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. பல காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடுவது, படத்தின் வெற்றிக்கு ஒரு பெரிய சாட்சி. இந்தப் படத்தில் மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமூடு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கென் கருணாஸின் அப்பாவாக அவர் வருகிறார். ரசிகர்களைப் போலவே, விமர்சகர்களும் படத்துக்கு நல்ல ரேட்டிங் கொடுத்துள்ளனர். ஹீரோ கென் மற்றும் சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோரின் நடிப்பு படத்தின் பெரிய ஹைலைட்டாகப் பார்க்கப்படுகிறது.
35
யூத் பட வசூல்
யூத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது. அப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் உலகளவில் ரூ.4.5 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்ததாம். இரண்டாம் நாளிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடர்ந்துள்ளது. நேற்று வேலை நாளாக இருந்தபோதிலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.3.50 கோடி வசூலித்து இருக்கிறது. இதன் மூலம் இரண்டு நாட்கள் முடிவில் இப்படம் ரூ.8 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் யூத் படம் பாக்ஸ் ஆபிஸில் மேலும் வசூலை வாரிசுருட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாள நடிகை அனிஷ்மா அனில்குமார் தான் இதில் ஹீரோயின். இவர்களுடன் தேவதர்ஷினி சேத்தன், பிரியான்ஷி யாதவ், மீனாட்சி தினேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆரம்பம் முதல் இறுதிவரை ரசிகர்களை சிரிக்க வைக்கும் காமெடி, காதல், எமோஷனல் காட்சிகள் என ஒரு முழுமையான ஃபெஸ்டிவல் என்டர்டெய்னராக 'யூத்' அமைந்துள்ளது. இளைஞர்களுக்கு ஒரு கொண்டாட்டமான அனுபவத்தைக் கொடுக்கும் இந்தப் படம், எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
55
பாடல்களுக்கு வரவேற்பு
பள்ளிப் பருவ காதல், காமெடி, டிராமா ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு கென் கருணாஸே கதை எழுதியுள்ளார். பார்வதா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் கருப்பையா சி. ராம் மற்றும் சுலோச்சனா குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர். கென், பிரபல நகைச்சுவை நடிகர் கருணாஸின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பாடல்கள் தியேட்டரில் பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த 'முட்ட கலக்கி' பாடல் தென்னிந்தியா முழுவதும் டிரெண்டானது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.