ஒரே படத்தில் ஹீரோவாக மட்டுமின்றி, இயக்குநராகவும் அறிமுகமாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த தமிழ் சினிமா ஸ்டாரின் குழந்தைப்பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த பிரபலம் பற்றி பார்க்கலாம்.
சினிமாவில் முதல் படத்தில் ஹீரோவாக அறிமுகமானாலும் இயக்குநராக அறிமுகமானாலும் சரி அதை எப்படியாவது ஹிட் படம் ஆக்கிவிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் தான் புதுமுகங்கள் இருப்பார்கள். ஆனால் முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி அப்படத்தையும் இயக்கி, அதில் பிளாக்பஸ்டர் வெற்றியையும் ருசித்துள்ளார் ஒருவர். அவர் இயக்கி நடித்த படம், இந்த ஆண்டு அதிக வசூல் அள்ளிய படங்கள் பட்டியலில் டாப் 3-ல் உள்ளது. அந்த அளவுக்கு ஒரே படத்தில் ஓஹோனு ஃபேமஸ் ஆகிவிட்டார். அந்த பன்முகத்திறமை கொண்ட கலைஞனின் குழந்தைப்பருவ புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.
27
யார் அந்த பிரபலம்?
அந்த பிரபலம் வேறுயாருமில்லை கென் கருணாஸ் தான். நடிகர் கருணாஸின் மகனான இவர் கடந்த 2001-ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை சினிமாவில் காமெடியனாகவும் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்திருந்ததால், கென்னுக்கு சிறு வயதிலேயே சினிமாவில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. இவர் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ரகளபுரம் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
37
கருணாஸ் மகன்
அப்படத்தில் நடிகர் கருணாஸுடன் இவர் செய்த காமெடி கலாட்டா மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. இன்றளவும் அந்த நகைச்சுவை காட்சிகள் ஆதித்யா டிவியில் சக்கைப்போடு போட்டு வருகின்றன. இதன் பின்னர், கடந்த 2016ம் ஆண்டு குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘அழகு குட்டி செல்லம்’ என்கிற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.
இதன்பின்னர் கென் கருணாஸுக்கு ஒரு நடிகராக மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்த படம் என்றால் அது அசுரன் தான். கடந்த 2019-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் ரிலீஸ் ஆன இப்படத்தில் தனுஷின் மகனாக சிதம்பரம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கென். அதில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. குறிப்பாக அடிவாங்கும் காட்சிகளில் தன்னுடைய நடிப்பால் கண்களை குளமாக்கிவிட்டார் கென்.
57
உதவி இயக்குநராக பணியாற்றிய கென்
அசுரன் படத்தில் கென்னின் நடிப்பை பார்த்து வியந்துபோன தனுஷ், தன்னுடைய அடுத்த படமான வாத்தியிலும் அவரை ஒரு சிறிய ரோலில் நடிக்க வைத்தார். அப்போதே தனுஷின் படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்ற தொடங்கினார் கென். திருச்சிற்றம்பலம் படத்தில் அவர் உதவி இயக்குநராக பணியாற்றி இருந்தார்.
67
இயக்குநராக அறிமுகம்
இதையடுத்து வெற்றிமாறன் இயக்கிய விடுதலை பாகம் 2 திரைப்படத்திலும் நடித்தார். அதில் இவர் நடித்த ஆக்ஷன் காட்சிகள் செம மாஸ் ஆக இருந்தது. அந்த காட்சிகளில் தன் உயிரைக் கொடுத்து நடித்திருந்தார் கென். அப்படத்திற்கு பின்னர் தன்னுடைய முதல் படத்தை இயக்கும் பணியில் இறங்கினார். அப்படத்திற்கு யூத் என டைட்டில் வைத்து, தன்னுடைய நண்பர்கள் உடன் சேர்ந்து இயக்கி வந்தார்.
77
மாஸ் வெற்றியை ருசித்த யூத்
யூத் திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்டது. அப்படம் தியேட்டரில் 82 கோடி வசூலை வாரிக்குவித்து இருந்தது. இதன்மூலம் இந்த ஆண்டு அதிக வசூல் அள்ளிய படங்களில் பட்டியலில் 3ம் இடத்தை பிடித்து அசத்தியது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோ மற்றும் இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை ருசித்தவர் என்கிற பெருமையை பெற்றுள்ளார் கென்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.