2022-ல் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு வசூலை வாரிக்குவித்த டாப் 10 தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ

Published : Dec 05, 2022, 03:46 PM ISTUpdated : Dec 20, 2022, 03:09 PM IST

தமிழ் திரையுலகில் 2022-ம் ஆண்டு ரிலீசான படங்களில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
110
2022-ல் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு வசூலை வாரிக்குவித்த டாப் 10 தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ

1. பொன்னியின் செல்வன் 1

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தை லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து இந்த ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் படம் என்கிற பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

210

2. விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருந்த படம் விக்ரம். இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. கடந்த ஜூன் மாதம் ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.420 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. இந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டிய தமிழ் படங்கள் பட்டியலில் விக்ரம் படம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

310

3. பீஸ்ட்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டன்று ரிலீசானது. இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் குடும்பங்கள் இப்படத்தை விரும்பி பார்த்ததால் பாக்ஸ் ஆபிஸில் ரூ.236 கோடி வசூலித்து டாப் 10 பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

410

4. வலிமை

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த படம் வலிமை. போனி கபூர் தயாரித்திருந்த இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசானது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினாலும், கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸீல் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இந்த டாப் 10 பட்டியலில் 4-ம் இடத்தை பிடித்துள்ளது.

510

5. எதற்கும் துணிந்தவன்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் டாப் 10 பட்டியலில் 5-ம் இடத்தை பிடித்துள்ளது. இப்படம் பாக்ஸ் ஆபிஸீல் ரூ.175 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தாலும், விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்தது. இப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

610

6. டான்

அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் டான். லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே. நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்த இப்படம் கடந்த மே மாதம் ரிலீசானது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.125 கோடிக்கு மேல் வசூலித்து டாப் 10 பட்டியலில் 6-ம் இடத்தை பிடித்துள்ளது.

710

7. திருச்சிற்றம்பலம்

மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் திருச்சிற்றம்பலம். எளிமையான கதைக்களத்துடனும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.110 கோடிக்கு மேல் வசூலித்து டாப் 10 பட்டியலில் 7-வது இடத்தை பிடித்துள்ளது.

810

8. சர்தார்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த திரைப்படம் சர்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசானது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து டாப் 10 பட்டியலில் 8-வது இடத்தை பிடித்துள்ளது.

910

9. லவ் டுடே

பிரதீப் ரங்கநாதன் இயக்கியதோடு மட்டுமின்றி ஹீரோவாகவும் நடித்திருந்த படம் லவ் டுடே. ஏஜிஎஸ் நிறுவனம் வெறும் 5 கோடி பட்ஜெட்டில் தயாரித்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்து பிரம்மாண்ட வெற்றியை ருசித்ததோடு இன்னும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இது டாப் 10 பட்டியலில் 9-ம் இடத்தை பிடித்துள்ளது.

1010

10. வெந்து தணிந்தது காடு

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடித்திருந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.60 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி கண்டது. டாப் 10 பட்டியலில் இந்த படம் 10-வது இடத்தை பிடித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories