நடிகர் விஜய்யின் வாரிசு படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதால் அப்படத்தின் ரிலீஸ் பணிகள் ஒருபுறம் படு பிசியாக நடைபெற்று வந்தாலும், மறுபக்கம் விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் அப்படத்தில் நடிகர் விஜய் கேங்ஸ்டராக நடிக்க உள்ளார்.
இப்படத்திற்கு இன்று சென்னையில் பூஜை போடப்பட்டது. சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஏவிஎம் ஸ்டூடியோவில் தான் தளபதி 67 படத்துக்கான பூஜை போடப்பட்டது. இதில் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்பட தளபதி 67-ல் பணியாற்றும் குழுவினரும் கலந்துகொண்டனர். ஆனால் இந்த பூஜை குறித்த புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதற்கு காரணம் படக்குழுவினர் யாரும் செல்போன் கொண்டுவர தடைவிதிக்கப்பட்டது தானாம். அந்த அளவுக்கு இப்படத்தின் பூஜை குறித்த படங்கள் வெளியாகிவிடக் கூடாது என்பதில் படக்குழு உறுதியாக இருந்தது. ஏனெனில், அப்படி வெளியானால் அது வாரிசு படத்தின் புரமோஷனை பாதிக்கும் என்பதால், அப்படம் ரிலீசான பின்னர் இதுகுறித்த அறிவிப்பை ஒரு டீசராக வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
இந்த டீசர் விக்ரம் படத்திற்காக எடுக்கப்பட்ட டீசரை போல் இருக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இதற்கான ஷூட்டிங் நாளை முதல் நான்கு நாட்களுக்கு சென்னையில் நடைபெற உள்ளதாம். அதுமட்டுமின்றி போட்டோஷூட் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... 3 பேருக்கு ஸ்கெட்ச் போட்ட ஹவுஸ்மேட்ஸ்! பிக்பாஸில் இந்த வாரம் எவிக்ஷன் லிஸ்ட்டில் சிக்கியது யார்.. யார்?
இந்த படத்தின் பூஜையில் நடந்த இன்னொரு ஸ்பெஷலான விஷயம் என்னவென்றால், ஏவிஎம்-ல் உள்ள பிள்ளையார் கோவிலில் தான் இப்படத்திற்கு பூஜை போடப்பட்டது.
நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு அங்கு பூஜை போடப்படுவது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் தான் நடிக்கும் எந்த படமாக இருந்தாலும், இந்த கோவில் தான் பூஜை போடுவாராம். இந்த செண்டிமெண்டை பல ஆண்டுகளாக ரஜினி பின்பற்றி வரும் நிலையில், தற்போது விஜய்யும் அதனை பாலோ செய்ய தொடங்கி உள்ளார் போல தெரிகிறது.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் ‘கட்டா குஸ்தி’... காத்துவாங்கும் ‘டிஎஸ்பி’ - 3 நாள் வசூல் நிலவரம் இதோ