Kollywood Debut Heroes in 2026 : 2026ம் ஆண்டு கோலிவுட்டில் ஏராளமான புது ஹீரோக்கள் அறிமுகமான முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்துள்ளனர். அவர்களைப் பற்றி பார்க்கலாம்.
2026ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம். கடந்த ஆண்டு வரை ஹிட் படங்களின் எண்ணிக்கை கடும் சரிவை சந்தித்திருந்த நிலையில், இந்த ஆண்டு அதன் எண்ணிக்கை மளமளவென உயர்ந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் புதுமுகங்கள் தான். இந்த ஆண்டு ஏராளமான சிறு பட்ஜெட் படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டாகின. அதிலும் இந்த ஆண்டு அறிமுகமான இளம் ஹீரோக்களின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்த வகையில் முதல் படத்திலேயே ஹிட் அடித்த ஹீரோக்கள் யார்... யார் என்பதை இங்கே பார்க்கலாம்.
25
அபிஷன் ஜீவிந்த்
சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த டூரிஸ்ட் ஃபேமிலி என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக எந்த படத்தை இயக்கப்போகிறார் என அனைவரும் காத்திருக்க, வித் லவ் என்கிற படம் மூலம் இந்த ஆண்டு ஹீரோவாக அறிமுகமாகி அதிர்ச்சி கொடுத்தார். அப்படத்தில் அவரின் நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. கம்மி பட்ஜெட்டில் உருவான அப்படம் பாக்ஸ் ஆபிஸில் 39.44 கோடி வசூலை வாரிக்குவித்தது.
35
கென் கருணாஸ்
நடிகர் கருணாஸின் மகன் கென், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், அவர் ஹீரோவாக அறிமுகமானது இந்த ஆண்டு தான். கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் ஆன யூத் படத்தின் மூலம் ஹீரோவாக மட்டுமின்றி இயக்குநராகவும் அறிமுகமாகி இருந்தார் கென். அப்படத்தின் ரிலீசுக்கு முன்பே பாடல்கள் சக்கைப்போடு போட்டன. அதனால் படத்தின் மீதான ஹைப் ஏறி, படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படம் துரந்தர் 2 படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆனாலும் 80 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது.
இந்த ஆண்டு கோலிவுட்டிற்கு கிடைத்த மற்றொரு மாஸ் ஹீரோ லோகேஷ் கனகராஜ். விஜய், கமல், ரஜினிகாந்த் என பல்வேறு மாஸ் ஹீரோக்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இந்த ஆண்டு ரிலீஸ் ஆன டிசி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக காலடி எடுத்து வைத்தார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்த டிசி, பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிசுருட்டியது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
55
ரிஷிகாந்த்
கோலிவுட்டுக்கு 2026-ம் ஆண்டு கிடைத்த மற்றொரு ஹீரோ ரிஷிகாந்த். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆன மொத ராத்திரி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த ஆண்டு இவருக்கு இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் கிடைத்துள்ளன. மொத ராத்திரியை போல், இவர் அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்த டோரதி திரைப்படமும் அமோக வரவேற்பை பெற்றது. இதனால் ரிஷிகாந்திற்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கி உள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.