Rajinikanth Villain Role : தான் மீண்டும் ஒரு முழு நீள வில்லனாக நடிக்க ஆசைப்படுவதாக பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் ரஜினி தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
'எனக்கு மிகவும் பிடித்த வில்லன் என்றால் அது தலைவர் (ரஜினிகாந்த்) தான். அவர் தனது சினிமா வாழ்க்கையை வில்லனாகவே ஆரம்பித்தவர். சமீபத்தில் டோரதி படம் பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து, மதுரை பின்னணியில் ஒரு கதை பண்ணலாம், ஆனால் இந்த முறை நான் முழு வில்லனாக இருக்கும் ஒரு கதாபாத்திரத்தை எழுத வேண்டும் என்று சொன்னார். யோசிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்' என 'டோரதி', 'ஜிகர்தண்டா' புகழ் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.
கோவா பனாஜியில் நடந்து வரும் 57வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய அவர், தனது படங்களின் வில்லன் கதாபாத்திரங்கள் குறித்து விளக்கினார்.
24
ஒவ்வொரு மனிதனின் இதயத்தின் உண்மையான நிறம் கிரே
'குழந்தை பருவத்தில் இருந்தே நல்லவர்கள் (வெள்ளை), கெட்டவர்கள் (கருப்பு) என இரண்டு பிரிவுகளாகவே பார்த்து வளர்ந்திருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு மனிதனின் இதயத்தின் உண்மையான நிறம் கிரே தான். நாம் சிக்கிக்கொள்ளும் சூழ்நிலைகளும், சமூகமும் தான் நம்மை நல்லவர்களாகவோ, கெட்டவர்களாகவோ மாற்றுகிறது. ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் கூட நல்ல ராஜாக்களிடம் கிரே ஷேடு இருக்கும். நேரடியாக கெட்டவர்கள் என்று அடையாளம் காணக்கூடியவர்களை விட, அன்பின் போர்வையில் கெட்டதைச் செய்பவர்களே அதிக ஆபத்தானவர்கள்' என்றார்.
'டோரதி' படத்தை உதாரணமாக காட்டிய அவர், 'நேரடியாக கெட்டவர் என அடையாளம் காணக்கூடிய விசில் வீரய்யா போன்ற கதாபாத்திரங்களை விட, தாங்கள் நல்லவர்கள் என நம்பிக்கொண்டு கெட்டதைச் செய்யும் பரோட்டா கடை உரிமையாளர் போன்ற கதாபாத்திரங்களே அதிகம் ஆபத்தானவை' என கருத்து தெரிவித்தார்.
34
எழுதும் முறை குறித்து கார்த்திக் சுப்புராஜ் சொல்வது என்ன?
தனது எழுதும் முறை குறித்து விளக்கிய சுப்புராஜ், 'நான் எழுத உட்காரும்போது 10 முதல் 15 சதவீத சிறு ஐடியா மட்டுமே தலையில் இருக்கும். எழுத எழுத கதாபாத்திரங்களும், சூழ்நிலைகளுமே எனக்கு வழிகாட்டும். நேரடியாக வசனம் எழுதுவதற்கு பதிலாக, முதலில் கதையின் ஆரம்பம், மையம், முடிவு ஆகியவற்றை உள்ளடக்கிய 20-30 பக்க 'ட்ரீட்மென்ட் நோட்' தயாரித்து, உதவி இயக்குநர்கள் குழுவுடன் விவாதித்த பிறகே முழு திரைக்கதை எழுத ஆரம்பிப்பேன்' என்றார். 'டொரத்தி' படத்திற்காக தனது ஐடியாவை நாவலாசிரியர் சரவணன் சந்திரனிடம் கொடுத்து குறு நாவல் போல் எழுதச் செய்து, பின்னர் அதை திரைக்கதையாக மாற்றியதை அவர் தெரிவித்தார்.
'டோரதி' படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் பேச்சு
தனது சமீபத்திய 'டோரதி' படம் குறித்து பேசிய அவர், '90களில் பாலின மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு சட்ட அங்கீகாரம் இல்லாததால் திருநங்கைகள் அங்கீகாரமற்ற முறையில் ஆபரேஷன் செய்துகொண்டு உயிரிழந்த உண்மை சம்பவங்களே இந்த படத்திற்கு இன்ஸ்பிரேஷன். இளையராஜாவின் இசை, சனந்த், ரிஷிகாந்த் ஆகியோரின் நடிப்பு படத்தை சாமானியர்களிடம் கொண்டு சேர்த்தது. தியேட்டர்களில் படம் பார்த்த ஆண்கள் கண்ணீர் விட்டு, அங்கிருந்த திருநங்கைகளை கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்பதை நான் என் கண்ணால் பார்த்திருக்கிறேன். இந்த படத்தால் ஈர்க்கப்பட்டு இலங்கை அகதி பெண் ஷாலினி எழுதிய கடிதத்தை அடிப்படையாக கொண்டு வந்திருக்கும் 'அன்புள்ள டோரதி' புத்தகம் எனக்கு உலகின் எந்த விருதை விடவும் பெரியது' என நெகிழ்ந்தார். ஓடிடி ஆதிக்கம் இருந்தாலும் தான் எப்போதும் தியேட்டர் அனுபவத்திற்காகவே படம் எடுப்பதாக அவர் தெளிவுபடுத்தினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.