- Home
- Gallery
- Kollywood : 40 ஆண்டுகள்.. நன்கொடையாக தந்தது மட்டும் 310 கோடி.. கர்ணனாக வாழ்ந்த நடிகர் - யார் அவர்? MGR இல்ல!
Kollywood : 40 ஆண்டுகள்.. நன்கொடையாக தந்தது மட்டும் 310 கோடி.. கர்ணனாக வாழ்ந்த நடிகர் - யார் அவர்? MGR இல்ல!
Kollywood Actor : அக்காலம் துவங்கி இக்காலம் வரை பல சூப்பர் ஹிட் நடிகர் நடிகைகள் கண்டுள்ளது இந்த கோலிவுட் உலகம். அதே போல, அதில் பலர் கொடுத்து கொடுத்து கை சிவந்த மகான்கள் என்றே கூறலாம்.

MGR
கோலிவுட் உலகில் பயணித்த ஒரு மிகப்பெரிய ஜாம்பவான், சிறந்த நடிகராக திகழ்ந்தது மட்டுமல்லாமல், மிகச்சிறந்த மனிதனாகவும் வாழ்ந்திருக்கிறார். உண்மையில் இது பலரும் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்றே கூறலாம். அதாவது கடந்த 1953ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை, இந்த இடைப்பட்ட 40 ஆண்டுகளில் மட்டும் சுமார் 310 கோடி ரூபாயை ஒரு தமிழ் நடிகர் நன்கொடையாக பிறருக்கு வழங்கியிருக்கிறார்.
Sivaji
கொடுத்து கொடுத்து சிவந்த கைகள் என்றால், உடனே நம் நினைவில் முதலில் வருவது எம்ஜிஆர் அவர்கள் தான். அதில் மாற்றுக்கருத்தும் கிடையாது, தனது வாழ்நாளில் திரைப்படங்கள் மூலமாகவும், முதலமைச்சர் என்கின்ற பதவியின் மூலமாகவும் பல நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர் எம்ஜிஆர் அவர்கள் தான். ஆனால் இன்று நாம் இந்த பதிவில் பார்க்கவிருப்பது அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரை பற்றித்தான்.
Sivaji Ganesan
அவர் இறந்து 23 ஆண்டுகள் கடந்துவிட்டது என்றாலும் கூட, தமிழ் சினிமாவில் நடிப்பின் கடவுளாக பார்க்கப்பட்ட ஒரே நடிகர் அவர். அவர் ஏற்று நடித்ததால் தான் கட்டபொம்மனும், சுபாஷ் சந்திரபோசும் இப்படி தான் இருந்தார்கள் என்பதை மக்கள் அறிந்தனர். பராசக்தி முதல் படையப்பா வரை தனது 49 ஆண்டுகால சினிமா பயணத்தில், 288 படங்களை நடித்து புகழ்பெற்ற சிவாஜி கணேசன் தான் மேலே சொன்ன அந்த நன்கொடைக்கு சொந்தக்காரர்.
Padayappa
ஆய்வாளர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட புத்தகம் ஒன்றில் இது குறித்து தெளிவாக பேசியுள்ளார். மேலும் அப்போது அந்த புத்தகத்தை இளையராஜா வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. நடிப்பால் மட்டுமல்ல, தனது குணத்தாலும் பலர் நெஞ்சில் குடிகொண்ட நாயகனாக திகழ்ந்து வந்துள்ளார் செவாலியர் சிவாஜி கணேசன்.
சந்தூர் மம்மிக்கே டஃப் கொடுக்கும் த்ரிஷாவின் அம்மா... வைரலாகும் அன்சீன் போட்டோக்களை பார்த்தீங்களா?