மதகஜராஜா முதல் டூரிஸ்ட் ஃபேமிலி வரை... 2025-ல் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த டாப் 5 தமிழ் மூவீஸ்

Published : Dec 05, 2025, 12:51 PM IST

2025-ம் ஆண்டு தமிழ் சினிமா கொடுத்த ஹிட் படங்களில், எதிர்பாரா வெற்றியை ருசித்த திரைப்படங்கள் சில உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

PREV
15
மதகஜராஜா

2025-ம் ஆண்டு பல்வேறு ஆச்சர்யங்கள் நிறைந்த ரிசல்டை பல படங்களுக்கு கொடுத்திருக்கிறது. அதில் ஒரு முக்கியமான படம் தான் மதகஜராஜா. சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்து 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்த இப்படம், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இது ஆச்சர்யம் என்னவென்றால் அதற்கு போட்டியாக வெளிவந்த புதுப்படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவின.

விஷால் மற்றும் சந்தானம் இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் நண்பர்களுடன் ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார்கள், அது இறுதியில் ஒரு பெரிய சண்டையாக மாறுகிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் என்பதே மதகஜராஜா படத்தின் கதை.

25
டூரிஸ்ட் ஃபேமிலி

2025-ல் எதிர்பாரா ஹிட் அடித்த படங்களில் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் ஒன்று. அபிஷன் ஜீவிந்த் இயக்கிய இப்படம் சூர்யாவின் ரெட்ரோ படத்துக்கு போட்டியாக வெளிவந்ததால், ரிலீசுக்கு முன்னர் வரை ரெட்ரோ மீது தான் அனைவரின் கவனமும் இருந்தது. ஆனால் இப்படம் சைலண்டாக சம்பவம் செய்துவிட்டது.

இலங்கையிலிருந்து தப்பி வரும் சசிகுமாரின் குடும்பம் சென்னையில் தங்கள் அடையாளத்தை மறைத்து வாழ முயல்கிறது. ஆனால் ஒரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் போலீசாரால் சசிகுமார் குடும்பம் தேடப்படுகிறது. இவர்கள் சிக்கினார்களா? இல்லையா? என்பதே படத்தின் கதை.

35
ஆண் பாவம் பொல்லாதது

'ஆண் பாவம் பொல்லாதது' படமும் இந்த ஆண்டின் சர்ப்ரைஸ் ஹிட் படங்களில் ஒன்று. ரியோ ராஜ் நாயகனாக நடித்த இப்படத்தை கலையரசன் தங்கவேல் இயக்கி இருந்தார். இன்றைய தலைமுறையினர் தங்கள் வாழ்கையோடு கனெக்ட் செய்துகொள்ளும் விதமாக இருந்ததே இப்படத்தின் மிகப்பெரிய பலம்.

ஐடியில் பணியாற்றும் நவீன சிந்தனை கொண்ட இளைஞரான ரியோ ராஜ், மாளவிகா மனோஜை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிறகு எழும் ஈகோ, நவீன உறவுச் சிக்கல்கள், மற்றும் விவாகரத்து ஆகியவற்றை மையமாகக் கொண்டது தான் இப்படம்.

45
சக்தித் திருமகன்

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான அரசியல் த்ரில்லர் திரைப்படம் தான் 'சக்தி திருமகன்'. அருண்பிரபு இயக்கிய இப்படம் அரசியலில் நடக்கும் சூழ்ச்சிகள், ஊழல், அதிகாரப் போட்டி ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது.

தன் தாயின் மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளைக் கண்டறிந்து, அதில் தொடர்புடையவர்களை பழிவாங்க முயலும் ஒருவனின் கதை தான் இந்த சக்தி திருமகன்.

55
லெவன்

லோகேஷ் அஜல்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் வெளியாகி எதிர்பாரா வெற்றியை ருசித்த படம் லெவன். அதிகளவிலான இரட்டையர்கள் நடித்த படம் என்கிற பெருமையையும் இப்படம் பெற்றிருக்கிறது.

தொடர் கொலைகளைச் செய்யும் ஒரு சைக்கோ கில்லரை பிடிக்கும் ஒரு புத்திசாலி போலீஸ் அதிகாரியைப் பற்றிய கதை தான் இந்த லெவன்.

Read more Photos on
click me!

Recommended Stories