Yashika anand
தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகையான யாஷிகா ஆனந்தின் ஓட்டுசாலை விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு பார்ட்டில் ஒன்றில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த் டாடா ஹேரியர் காரை படுவேகமாக ஓட்டியுள்ளார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூலேறிக்காடு என்ற பகுதி அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
yashika
அங்கிருந்து தூக்கி வீசப்பட்ட கார் பள்ளத்தில் விழுந்துள்ளது. காருக்குள் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் நெருங்கிய தோழியான பெண் இன்ஜினியர் வள்ளிசெட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Yashika anand
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பள்ளத்தில் சிக்கிய காரையும், படுகாயம் அடைந்தவர்களையும் மீட்டனர். முதற்கட்டமாக பூஞ்சேரியில் உள்ள முதலுதவி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட யாஷிகா மற்றும் அவருடைய ஆண் நண்பர்களான சையது, ஆமீர் ஆகிய மூவரும், படுகாயங்கள் அதிகம் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
yashika
இடுப்பு, முதுகு, கை, கால் என பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், யாஷிகா ஆனந்த் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று சிகிச்சைப் பிறகு சுய நினைவுக்கு வந்த யாஷிகாவிடம் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் யாஷிகாவின் உடல் நிலை குறித்து அவரது தங்கை ஓஷேன் தெரிவித்துள்ளார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களின் கவர்ச்சி புயலாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
அதில் யாஷிகாவுக்கு ஒரு ஒரு சர்ஜரி மட்டுமே இப்போது வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் பல இடங்களில் எலும்பு முறிவு உள்ளதால் இன்னும் சில சர்ஜரி செய்யவேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வெள்ளித்திரையில் வாய்ப்பு இல்லாததால் சின்னத்திரை வரை இறங்கி வந்த யாஷிகா ஆனந்த் தற்போது மாடலிங்கில் படு பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி கிளிக்குகளை தட்டிவிட்டு இளைஞர்கள் பட்டாளத்தை ஏங்க வைக்கிறார்.
சுய நினைவிற்கு வந்தாலும் தற்போது வரை யாஷிகா தீவிர சிகிச்சை பிரிவில் தான் உள்ளதாவும். அவருக்கு இன்னும் நிறைய சர்ஜரி செய்ய வேண்டியுள்ளதால் நீங்கள் அவருக்காக கடவுளிடம் பிராத்தனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும், சமூக வலைத்தளத்தில் விரைவில் யாஷிகா குணமடைய வேண்டும் என தெரிவித்து வருகிறார்கள்.