பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் அதிக வசூலை வாரிக் குவித்த டாப் 5 படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் வித் லவ், தாய் கிழவி போன்ற படங்களும் இடம்பெற்றுள்ளது.
2026-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஜனவரி மாதம் ஏமாற்றம் அளித்த நிலையில், பிப்ரவரி மாதம் நம்பிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனவரி மாதத்தை விட மிக மோசமான ஒன்றாக பிப்ரவரி அமைந்துள்ளது. பிப்ரவரியில் பெரிய படங்கள் ஒன்று கூட ரிலீஸ் ஆகவில்லை. அனைத்துமே சிறு பட்ஜெட் படங்கள் தான். இது போதாதென்று எக்கச் சக்கமான படங்களை போட்டி போட்டு ரீ-ரிலீஸ் செய்தனர். இதனால் புதுப் படங்கள் போதியளவில் தியேட்டர்கள் கிடைக்காமல் தத்தளிக்கும் நிலை உருவானது. இந்த நிலையில் பிப்ரவரி மாதம் அதிக வசூல் அள்ளிய டாப் 5 படங்களையும் அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தையும் பார்க்கலாம்.
26
5. பூக்கி
விஜய் ஆண்டனி தயாரிப்பில் புதுமுகங்கள் நடிப்பில் காதலர் தின விருந்தாக திரைக்கு வந்த படம் பூக்கி. அப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்யப்பட்டாலும் போதிய அளவிலான தியேட்டர்கள் கிடைக்காததால் பூக்கி படம் பிளாப் ஆனது. அப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெறும் ரூ.1.37 கோடி மட்டுமே வசூலித்திருந்தது.
36
4. சீதா பயணம்
ஆக்ஷன் கிங் அர்ஜுன் இயக்கிய படம் சீதா பயணம். இப்படத்தில் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா நாயகியாக நடித்திருந்தார். இப்படம் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் ஆனது. லவ்வர்ஸ் டே ஸ்பெஷலாக திரைக்கு வந்த இப்படம் வந்த வேகத்தில் வாஷ் அவுட் ஆனது. இப்படம் உலகளவில் ரூ.1.73 கோடி வசூலித்துள்ளது.
பிப்ரவரி மாதத்தில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற படம் மை லார்ட். இப்படத்தை ராஜு முருகன் இயக்கி இருந்தார். இப்படத்தில் சசி குமார் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் பாசிடிவ் ரிவ்யூ வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெறும் ரூ.2.91 கோடி மட்டுமே வசூலித்து 3ம் இடத்தில் உள்ளது.
56
2. தாய் கிழவி
பிப்ரவரி மாதத்தில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக வந்த படம் தான் தாய் கிழவி. பிப்ரவரி 27-ந் தேதி திரைக்கு வந்த இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீஸ் ஆகி மூன்று நாட்களே ஆகும் நிலையில், உலகளவில் ரூ.18.6 கோடி வசூலித்து இரண்டாம் இடத்தில் உள்ளது.
66
1. வித் லவ்
செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் பிப்ரவரி மாதம் 6-ந் தேதி திரைக்கு வந்த படம் வித் லவ். இப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடித்திருந்தார். அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி, பிப்ரவரி மாதத்தில் அதிக வசூல் அள்ளிய படமாக மாறியது. இப்படம் உலகளவில் ரூ.38.19 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.