Lata Mangeshkar : அரச குடும்பத்து வாரிசை காதலித்த லதா மங்கேஷ்கர்!! கடைசி வரை திருமணம் செய்துகொள்ளாததன் பின்னணி

Ganesh A   | Asianet News
Published : Feb 06, 2022, 01:54 PM IST

திருமணம் செய்துகொள்ளாததற்கான காரணத்தை பாடகி லதா மங்கேஷ்கர் இதுவரை எந்த நிகழ்விலும், பேட்டிகளிலும் வெளிப்படுத்தியதில்லை. இருப்பினும் அவரது இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. 

PREV
15
Lata Mangeshkar : அரச குடும்பத்து வாரிசை காதலித்த லதா மங்கேஷ்கர்!! கடைசி வரை திருமணம் செய்துகொள்ளாததன் பின்னணி

பாடகி லதா மங்கேஷ்கர் நான்கு வயதிலேயே படத்தொடங்கி, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைக் கடந்து, சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இந்திய திரையுலகில், மிகச்சிறந்த பின்னணிப் பாடகியாக புகழ் பெற்று விளங்கினார். அவர் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். இசைக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் லதா மங்கேஷ்கர். 

25

அவர் திருமணம் செய்துகொள்ளாதது ஏன் என்பது குறித்த தகவலை தற்போது பார்க்கலாம். திருமணம் செய்துகொள்ளாததற்கான காரணத்தை பாடகி லதா மங்கேஷ்கர் இதுவரை எந்த நிகழ்விலும், பேட்டிகளிலும் வெளிப்படுத்தியதில்லை. இருப்பினும் அவரது இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. 

35

லதா மங்கேஷ்கருக்கு 12 வயது இருக்கும்போதே அவரது தந்தை மரணமடைந்து விட்டார். தந்தையின் மறைவுக்கு பின்னர் குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் லதாவிற்கு ஏற்பட்டது. இதனால் கடினமாக உழைத்து, தனது தம்பி மற்றும் 3 தங்கைகளை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என இது ஒரு காரணமாக கூறப்படுகிறது.

45

மற்றொரு காரணம் என்னவென்றால், அவர் பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் ராஜ் சிங் துங்கர்பூர் என்பவரை காதலித்ததாக சொல்லப்படுகிறது. ராஜ் சிங் அரச குடும்பத்தை சேர்ந்தவராம், மேலும் தந்தை மீது மிகுந்த அன்பு கொண்டவராம். இவர்களின் காதலுக்கு ராஜ் சிங்கின் தந்தை எதிர்ப்பு தெரிவித்தாராம். தனது குடும்பத்துக்கு பணக்கார வீட்டு பெண் தான் மருமகளாக வரவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தாராம். இதனால் அவர் லதா மங்கேஷ்கரை ஏற்றுக்கொள்ள வில்லை.

55

தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு லதா மங்கேஷ்கரை திருமணம் செய்துகொள்ளும் முடிவை கைவிட்ட ராஜ் சிங், தனது வாழ்நாள் முழுக்க திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என்றும் சொல்லிவிட்டாராம். இறுதிவரை லதா மங்கேஷ்கருடன் நட்பாக பழகி வந்தாராம் ராஜ் சிங். இவர் கடந்த 2009-ம் ஆண்டு மரணமடைந்தார். லதா மங்கேஷ்கரும் இதே முடிவை எடுத்ததனால் தான் இறுதி வரை திருமணம் செய்துகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

click me!

Recommended Stories