வளர்ச்சியை தடுக்க Slow Poison கொடுக்கப்பட்ட அவலம்!! அதிலிருந்து லதா மங்கேஷ்கர் சிங்கப்பெண்ணாய் மீண்டு வந்த கதை

First Published Feb 6, 2022, 11:56 AM IST

நைட்டிங் கேர்ள் ஆஃப் பாலிவுட் என போற்றப்படும் லதா மங்கேஷ்கருக்கு கடந்த 1963-ம் ஆண்டு மர்ம நபரால் Slow Poison கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

பாடகி லதா மங்கேஷ்கர் நான்கு வயதிலேயே படத்தொடங்கி, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைக் கடந்து, சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இந்திய திரையுலகில், மிகச்சிறந்த பின்னணிப் பாடகியாக புகழ் பெற்று விளங்கினார். அவர் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரைப்பற்றி பலரும் அறிந்திராத சில தகவல்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

இசை உலகில் லதா மங்கேஷ்கர் கொடிகட்டிப்பறந்த சமயத்தில், இவரின் வளர்ச்சி பிடிக்காத சிலர் ஒரு மிகப்பெரிய சதிச் செயலை செய்ததாக புகழ் பெற்ற எழுத்தாளர் பத்மா சச்தேவ் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். அதில் 1963ல் மர்ம நபரால் லதா மங்கேஷ்கருக்கு Slow Poison கொடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். அந்த சமயத்தில் லதா மங்கேஷ்கருக்கு 33 வயது தானாம். 

மர்ம நபர் கொடுத்த Slow Poison கலந்த உணவை சாப்பிட்ட லதா மங்கேஷ்கர், உடல் நலக்குறைவு ஏற்ப்பட்டு 3 நாட்கள் மரணப் படுக்கையில் இருந்தாராம். இந்த விவகாரத்தில் முதல் சந்தேகம், அவருக்கு உணவு கொடுத்த நபர் மீது தான் வந்துள்ளது. ஆனால் அவர் தலைமறைவாகி விட்டாராம். இதையடுத்து இவருக்கு போட்டியாக இருந்த பாடகிகள் மீதும், புகழ்பெற்ற பாடலாசிரியர் ஒருவர் மீதும் சந்தேகம் ஏற்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாம்.

இவ்வளவு பெரிய விஷயம் நடந்த பின்னரும் 3 மாதங்கள் முழுமையாக ஓய்வு எடுத்துக்கொண்ட லதா மங்கேஷ்கர், அதிலிருந்து சிங்கப்பெண் போல் மீண்டெழுந்து, சினிமாவில் தனது இசைப் பயணத்தை மீண்டும் தொடங்கினார். இந்த 3 மாதங்கள் லதா மங்கேஷ்கரின் வாழ்நாளில் கருப்புநாட்களாக பார்க்கப்பட்டுள்ளது. அவருடைய வாழ்நாளில் மட்டுமல்ல லதா மங்கேஷ்கரின் பாடல்களை விரும்பும் ரசிகர்களின் வாழ்நாளிலும் அந்த 3 நாட்கள் கருப்பு நாட்களாக பார்க்கப்பட்டதாம்.

click me!