Chandramukhi Secrets : 2005-ல் ரிலீசாகி 804 நாட்கள் ஓடி சாதனை படைத்த ‘சந்திரமுகி’ படத்தின் பின்னணியில் பல ஆச்சரியமான விஷயங்கள் இருக்கு. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்திய சினிமாவுல எக்காலத்துக்கும் ஏத்த பிளாக்பஸ்டர் படங்கள்ல ஒண்ணான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிச்ச ‘சந்திரமுகி’ படத்தின் பின்னணியில் பல அபூர்வமான, சுவாரஸ்யமான விஷயங்கள் இப்போ கவனம் ஈர்க்குது. கன்னடத்தில் விஷ்ணுவர்தன் நடிச்ச ‘ஆப்தமித்ரா’ படத்தின் வெற்றிக்கு அப்புறம் தமிழ்ல உருவான ‘சந்திரமுகி’ படத்துல தலைப்புல ஆரம்பிச்சு ஹீரோயின் தேர்வு வரை நடந்த சுவாரஸ்யமான விஷயங்களோட விவரம் இதோ.
கன்னடத்தில் டாக்டர் விஷ்ணுவர்தன் ‘ஹவுலா ஹவுலா’ங்குற மேனரிசத்தை பயன்படுத்தியிருந்தாங்க. ஆனா தமிழ்ல அதை விட கொஞ்சம் ‘ஹெவி’யான மேனரிசம் வேணும்னு முடிவு பண்ணாங்க. அதே மாதிரி ‘நாகவல்லி’ங்குற பேரையும் மாத்தி, அதை விட பவர்ஃபுல்லான ‘சந்திரமுகி’னு பேர் வச்சாங்க. ரஜினிகாந்த் சின்ன வயசுல ஒரு மராத்தி நாடகத்துல நடிக்கும்போது பயன்படுத்தின ‘லக்க லக்க லக்க லக்க’ங்குற குறிப்பிட்ட வார்த்தையை இந்த படத்துக்கு கொண்டு வந்து பயன்படுத்திக்கிட்டாங்க. அது படத்தோட ஹைலைட் ஆகிடுச்சு.
35
சிம்ரன் 3 நாள் ஷூட்டிங் பண்ணதுக்கு அப்புறம் ஜோதிகா என்ட்ரி!
சந்திரமுகி கேரக்டருக்கு முதல்ல சினேகா, சிம்ரன், ரீமா சென்னு மூணு நடிகைகளோட பெயர்களை பரிசீலனை செஞ்சாங்க. அதுல இறுதியா சிம்ரன் தேர்வானாங்க. ரஜினிகாந்த் பக்கத்துல நயன்தாரா நடிச்சிட்டு இருக்க, சிம்ரன் கூட ஷூட்டிங்கும் தொடங்கி 3 நாள் ஷூட்டிங் கூட முடிஞ்சிடுச்சு. ஆனா அதே நேரத்துல சிம்ரன் கர்ப்பமா இருக்குற விஷயம் தெரிய வந்துச்சு. படத்துக்கு நிறைய நாள் கால்ஷீட் தேவைப்பட்டதுனால அவங்களால தொடர முடியல. அப்போ ஏற்கனவே ஜோதிகா அவங்க தலையெழுத்துல எழுதுன மாதிரி அந்த கேரக்டர் அவங்களுக்கு தேடி வந்துச்சு. ஜோதிகாவும் அந்த கேரக்டர் பண்ண ரொம்ப ஆர்வமா இருந்ததுனால ‘சந்திரமுகி’யா கலக்குனாங்க.
ஒரிஜினல் மலையாளப் படமான ‘மணிச்சித்திரத்தாழ்’ படத்தோட நடிகை ஷோபனா அவங்க, இதுக்கு முன்னாடி தெலுங்குல ‘மிஸ்டர் பெள்ளாம்’, ‘ஸ்ரீகாரம்’ படங்களை தயாரிச்ச பார்த்தசாரதி அவங்களுக்கு ‘மணிச்சித்திரத்தாழ்’ டிவிடியை கொடுத்து, "இது ரொம்ப நல்லா இருக்கு, தெலுங்குல ரீமேக் பண்ணுங்க"னு ஆலோசனை சொன்னாங்களாம். ஆனா அவர் ஆர்வம் காட்டல. அப்புறம் கருணாகர் ரெட்டி, மகேஷ் பாபு, ரமேஷ் பாபு சேர்ந்து தமிழ் ‘சந்திரமுகி’யை தெலுங்குக்கு டப் பண்ணாங்க. தெலுங்குலயும் நேரடி தெலுங்கு படத்துக்கு நிகரான கலெக்ஷன் பண்ணி முன்னப்பின்ன பாக்காத அளவுக்கு வசூல் மழை பொழிஞ்சுது.
55
804 நாட்கள் ஓடின படம்
சென்னைல இருக்குற சிவாஜி கணேசன் அவங்களோட சொந்த தியேட்டரான ‘சாந்தி தியேட்டர்’ல ‘சந்திரமுகி’ படம் தடபுடலா 804 நாட்கள் ஓடிச்சு. இதுக்கு முன்னாடி 1944-ல் தியாகராஜ பாகவதர் நடிச்ச ‘ஹரிதாஸ்’ படம் சுமார் 768-க்கும் அதிகமான நாட்கள் ஓடின சாதனையை 2005-ல் ரஜினிகாந்த்தின் ‘சந்திரமுகி’ பிரேக் பண்ணுச்சு.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.