MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வேட்டையனாக வந்து காலில் விழுந்த ராகவா லாரன்ஸ்... கட்டியணைத்து வாழ்த்திய ரெக்கார்ட் மேக்கர் ரஜினி..!

வேட்டையனாக வந்து காலில் விழுந்த ராகவா லாரன்ஸ்... கட்டியணைத்து வாழ்த்திய ரெக்கார்ட் மேக்கர் ரஜினி..!

சந்திரமுகி 2 படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Sep 26 2023, 06:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Raghava Lawrence meet Rajinikanth

Raghava Lawrence meet Rajinikanth

நடிகர் ரஜினிகாந்தின் கெரியரில் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற படங்களில் சந்திரமுகியும் ஒன்று. பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த இப்படம் கடந்த 2005-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. சந்திரமுகி படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை 18 ஆண்டுகளுக்கு பின் எடுத்துள்ளனர். இப்படத்தில் ரஜினிகாந்துக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் வேட்டையனாக நடித்துள்ளார்.

24
Raghava Lawrence, Rajinikanth

Raghava Lawrence, Rajinikanth

சந்திரமுகி முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் உள்ள ஒரே ஒரு ஒற்றுமை வடிவேலு மட்டும் தான் அவரைத் தவிர மற்ற அனைவருமே வேறு நடிகர்கள். முதல் பாகத்தை போலவே இப்படத்திலும் வடிவேலுவின் காமெடி மிகவும் பேசப்படும் என கூறப்படுகிறது. சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினிக்கு அடுத்தபடியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கேரக்டர் என்றால் அது ஜோதிகாவுடையது தான். அந்த கேரக்டரை இந்த படத்தில் கங்கனா ரனாவத் ஏற்று நடித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Rajinikanth wishes chandramukhi 2 team

Rajinikanth wishes chandramukhi 2 team

சந்திரமுகி 2 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் மகிமா நம்பியா, ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார், சுபிக்‌ஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது. சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் வருகிற செப்டம்பர் 28-ந் தேதி திரைக்கு வர உள்ளது. அப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் புரமோஷன் பணிகளும் சூடுபிடித்துள்ளன.

44
rajinikanth blessing Raghava Lawrence

rajinikanth blessing Raghava Lawrence

இந்நிலையில், சந்திரமுகி 2 படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ், தன்னுடைய குருவும், சந்திரமுகி முதல் பாக ஹீரோவுமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார். சந்திரமுகி 2 படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதற்காக ரஜினிகாந்தை சந்தித்து அவரிடம் ஆசி வாங்கி உள்ளார் ராகவா லாரன்ஸ். தன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ராகவா லாரன்ஸை நடிகர் ரஜினிகாந்த் கட்டியணைத்தபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... தயாரிப்பாளரோடு உறவு... நிச்சயம் முடிந்த கையோடு முதல் காதலனை கழட்டிவிட்ட சினேகா! பயில்வான் சொன்ன பகீர் தகவல்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved