விஜய்க்கு மக்கள் ஏன் ஆதரவு தரவேண்டும்..? மனதைக் கலங்கடித்த ஒரு கிராமப்புற தாயின் குட்டிக் கதை..! ராவுத்தரின் வலி..!

Published : Nov 12, 2025, 07:46 PM IST

இந்த கிராமப்புறவாசிவாசி போல காப்பாற்ற வந்தவர் விஜய். மக்களுக்காக போராடுவதற்காக களத்தில் நிற்கும் பொழுது எவ்வளவு எதிர்ப்புகளை சந்திக்கிறார். அதற்காகத்தான் மக்களும் நானும் விஜய்க்கு ஆதரவாக நிற்கிறோம்

PREV
14

தமிழ் சினிமாவில் கோலோச்சும் நடிகர் விஜய் தவெகவை தொடங்கி, தற்போது அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவராக புதிய செல்வாக்கைப் படைத்து வருகிறார். அவரது பொதுமக்கள் செல்வாக்கு, குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மற்றும் நகர்புற வாக்காளர்கள் மத்தியில் வலுவாக உள்ளது. 2024 பிப்ரவரியில் கட்சியைத் தொடங்கியதிலிருந்து, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அவரது செல்வாக்கு அபார வளர்ச்சியடைந்து வருகிறது. இது தமிழக அரசியலில் திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவுக்கு சவாலாக மாறியுள்ளது.

அவருக்கு பல்வேறு கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தவெக கூட்டணிக்கு தவித்து கிடக்கின்றனர். இந்நிலையில், ராவுத்தர் இப்ராஹிம் சமூக வலைதளங்களில் தவெக, விஜய்க்கு ஆதரவாக பரபரப்பான கருத்துக்களை கூறி வருகிறார். அவர், தான் ஏன் விஜய்க்கு ஆதரவாக இருக்கிறேன், மக்கள் ஏன் விஜய்க்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது குறித்துப்பேசியுள்ள வீடியோ மனதை கணக்கச்செய்கிறது. அந்த வீடியோவில் அவர், ‘‘விஜய்க்கு நான் ஏன் சப்போர்ட் செய்கிறேன்? மக்கள் ஏன் அவருக்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என்பதை கூறுகிறேன். அப்புறம் ஏன் என்பது உங்களுக்கு புரியும்.

24

நான் ஒரு புத்தகம் படித்தேன். இந்த புத்தகத்தோட மையக்கருவாக எனக்கு புரிஞ்சது. நகர் புறத்தில் இருப்பவர்கள் நகர்ந்து செல்கிறார்கள்.கிராம புறத்தில் இருப்பவர்கள் தங்கி வாழ்கிறார்கள் என்கி மாதிரியான ஒரு கருத்தாக பார்த்தேன். நகர்ந்து செல்கிறார்கள், கிராமப் புறத்தில் தங்கி வாழ்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? இவர்கள் பொருளாதார ரீதியாக நகர்ந்து சென்று கொண்டிருக்கிறார்கள், கிராமப்புறத்தில் இருக்கிறவர்கள் தங்கி விடுகிறார்கள் என்ற ஒரு எண்ண ஓட்டத்தில்தான் படிக்க ஆரம்பித்தேன்.

அதை படிக்கும் பொழுது அதை எப்படி சொல்வது என்று எனக்குப் புரியவில்லை. எத்தனை முறை உணவளித்தாலும் வெட்கமே இல்லாமல் திரும்பத் திரும்ப உணவை கேட்டுக் கொண்டே இருக்கிறது பசி என்று ஒரு வரி இருக்கிறது. அதுபோல இந்த புத்தகத்தை நான் எத்தனை முறை படித்தாலும், இதைப்பற்றி எப்போது சொன்னாலும் அருவி போல கண்ணில் இருந்து தண்ணீர் வர ஆரம்பித்து விடுகிறது. அது என்ன மாதிரி ஒரு கதை என்றால் நகர்புறத்தில் வேலை வாய்ப்பைத் தேடி, கிராமப்புறத்தில் இருந்து வந்த ஒரு குடும்பம் அங்கே வசித்துக் கொண்டிருக்கிறது. அப்போது அந்த இடத்தில் ஓரத்தில் சாலையை கடக்க முயற்சிக்கும் பொழுது ஒரு சிறுமிக்கு அடிபட்டு விடுகிறது.

அடிபட்டு தலையில் இருந்து ரத்தம். முகமெல்லாம் இரத்தம். கழுத்தில் வழிந்து ஓடுகிறது. ஒரு பெரும் கூட்டம் அதை சுற்றி நிற்கிறது. எல்லாரும் பார்த்துட்டு பார்த்து விட்டு கடந்து போகிறார்கள். பார்த்து நகர்ந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள். சில நபர்கள், நகர்ப்புறவாசிகள் அதை வீடியோ எடுக்கிறார்கள். அப்போது அந்த இடத்திற்கு கிராமப்புறத்தில் இருந்து வந்த ஒரு பெண்மணி போய் பார்த்துவிட்டு அந்த ரத்த வெள்ளத்தில் கிடைக்கும் அந்த சிறுமையை பார்த்ததும் அந்தப்பெண் பதறியடித்து ‘‘அய்யோ.. எம்புள்ள..’’ எனச் சொல்லி கதறி அழுது கொண்டே அந்த சிறுமியை தூக்கிக்கொண்டு ஆட்டோவை கூப்பிட்டு ஆட்டோவில் ஏறி பயணப்படுகிறார். ஹாஸ்பிடல் வாசல் வந்தவுடனே தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த 100 ரூபாயை எடுத்து ஆட்டோகாரனிடம் கொடுக்கிறார்.

34

ஆட்டோக்காரன் எவ்வளவு காசு வேணும் என்றும் கேட்கவில்லை. இந்த அம்மாவும் எவ்வளவு காசு கொடுக்க வேண்டும் என்றும் கேட்கவில்லை. ‘‘சாமி என்கிட்ட இவ்வளவுதான்யா காசு இருக்கு.. வைச்சுக்கய்யா..’’ என இந்த நூறு ரூபாய் எனக் கொடுத்துவிட்டு சிறுமையை தூக்கிக்கொண்டு உள்ளே ஓடி மருத்துவரிடம் கொண்டு போய் அந்த குழந்தையை ஒப்படைத்து அவர்கள் ட்ரீட்மென்ட் கொடுக்க ஆரம்பித்துவிட்டு மருந்து வாங்கிட்டு வரச் சொல்கிறார்கள். அந்த மருந்து வாங்கிட்டு வரச் சொல்லும் பொழுது அந்த தாய் ஓடோடி போய் அங்கே இருக்கக்கூடிய மெடிக்கல் ஷாப்பில் மருந்து கேட்கும்போது ‘‘மருந்தை எடுத்துட்டு காசு குடுமா’’ என பெடிக்கல்காரர் கேட்கிறார்.

‘‘என்கிட்ட காசு இல்லையே..’ என்கிறார். காசு இல்லாவிட்டால் மருந்து தர மாட்டேன்... நீ காசு எடுத்துட்டு வா.. என்கிறார். அப்போது அந்த தாய், என்னசெய்வார்? மேல்மட்ட வாழ்க்கை கிடையாது. கையில் தங்க வளையலும், மோதிரமும் கிடையாது. இருந்தது ஒரே ஒரு சின்ன கம்மல். அந்த ரெண்டு கம்மளையும் கழட்டி கொடுத்து இதை வைத்துக்கொள் சாமி.. நான் வந்து காசு கொடுத்துட்டு அதுக்கப்புறம் வாங்கிக்கிறேன்’’னு சொல்லிட்டு வேகமா கொண்டு போய் மருந்து கொடுக்கிறார்கள்.

2 மணி நேரம் தாமதம் ஆகிறது. இங்கே அந்த மருந்து கொடுத்த மெடிக்கல்காரர் ‘‘ இது தங்கம் தானா? விற்கமுடியுமா? என நினைக்கிறார். திரும்ப வந்து அந்தப்பெண் காசு கொடுப்பாரா? என்ன செய்வது? என யோசித்தபடி அந்த மருந்து கடைக்காரர் நாமலே சென்று அந்தப்பெண்ணிடம் சென்று காசு கேட்க்கலாம் என உள்ளே செல்கிறார். இங்கே அந்த குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது. அந்த பெண் சிறுமியிடம், ‘‘பயப்படாத தாயீ.. நல்லாயிரும் நல்லா ஆயிடும்’’ என ஆறுதல் சொல்லிக் கொண்டே உட்கார்ந்து இருக்கிறார். அந்த மெடிக்கல்காரர் ‘‘ஏம்மா காசுக்கு கேட்கிறேன்.. கொடுங்க எங்கே’’ எனக் கேட்கிறார்.

44

காசு கொடுக்காம முடியாமல் என்ன செய்வது என்று யோசிக்கிறார் அந்தப்பெண்மணி. மருந்துக்கடைக்காரர் அந்த சிறுமியைப் பார்க்கிறார். அது அவருடைய குழந்தை. ஒரு நிமிஷம் அந்த மனுஷன் செத்துட்டான். ஒரு நொடியில் செத்துவிட்டான். ‘‘நம்ம புள்ளைய காப்பாத்துறதுக்கு தான் இந்த தாய் இவ்வளவு பாடுபட்டுச்சா..’’ என காலில் விழுந்து ரொம்ப மனம் நெகிழ்ந்து போகிறான். அதற்கு பிறகு அந்தப்பெண்மணியிடம் கேட்கும்போது, ‘‘ஏம்மா... இது என் பிள்ளை.. நீங்க அதுக்காக இவ்வளவு பாடுபட்டீர்கள்? எனக் கேட்கிறார். அதற்கு அந்த அம்மா, யார் பிள்ளையாக இருந்தால் என்ன?. பிள்ளை பிள்ளைதானய்யா..! என்கிறார்.

இந்த வார்த்தையை அந்த அம்மா சொல்லும்பொழுது எவ்வளவு ஒரு வலி மிகுந்த ஒரு விஷயம். அதன்பிறகு பிறகு அந்த தாயுடைய புகைப்படம் மருந்துக்கடைக்காரர் வீட்டில் நிரந்தரமாக இருக்கிறது. அந்த தாய் அவருடைய மனதில் நிரந்தரமாக இருக்கிறார். இதுபோல இந்த சமூகத்தில் இவ்வளவு பிள்ளைகள், மக்கள் பாதிக்கப்படுவதை பார்த்துவிட்டு இந்த தாய் கம்மளை கொடுத்த மாதிரி விஜய் ஒட்டுமொத்த வருமானத்தையும் விட்டுட்டு இந்த மக்களை காப்பாற்ற வேண்டும் என தனி மனிதனாக வந்து நிற்கிறார். அதற்காகத்தான் விஜய் கூட நம்ம நிக்கணும். விஜய்க்கு நீங்க எல்லாம் எதுக்கு ஆதரவாக நிக்கணும்னு சொல்றதுக்கான அர்த்தம் இப்போது புரிகிறதா? உங்களுக்கு எத்தனையோ நடிகர்கள் இந்த நகர்புறவாசிகள் கடந்து போனது போல் போய் விட்டார்கள்.

இந்த கிராமப்புறவாசிவாசி போல காப்பாற்ற வந்தவர் விஜய். மக்களுக்காக போராடுவதற்காக களத்தில் நிற்கும் பொழுது எவ்வளவு எதிர்ப்புகளை சந்திக்கிறார். அதற்காகத்தான் மக்களும் நானும் விஜய்க்கு ஆதரவாக நிற்கிறோம்’’ என்று கூறியுள்ளார் ராவுத்தர் இப்ராஹிம்.

Read more Photos on
click me!

Recommended Stories