ஸ்லிம்மாக இருக்க ஊசியா? சர்ச்சையில் சிக்கிய தமன்னா போட்டுடைத்த உண்மை!

Published : Nov 12, 2025, 07:10 PM IST

Tamannaah Bhatia Shocking Statement on Slimming Injection: நடிகை தமன்னா தன்னுடைய உடல் எடையை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள, ஊசி போட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், அவரே இதற்க்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

PREV
15
மில்க் பியூட்டி:

மில்க் பியூட்டி என இளம் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகை தமன்னா. மும்பையை சேர்ந்த தமன்னாவின் அறிமுகம் ஹிந்தி என்றாலும், இவருக்கு வாய்ப்புகளை வாரி வழங்கி முன்னணி நடிகையாக மாற்றியது தென்னிந்திய சினிமா தான். அதன்படி தமன்னா தமிழில் அறிமுகமான திரைப்படம் 'கேடி'. முதல் படத்திலேயே எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

25
திருப்புமுனையை ஏற்படுத்திய கல்லூரி:

இதை தொடர்ந்து எஸ் ஜே சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த 'வியாபாரி' திரைப்படம் தோல்வியை தழுவினாலும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து... உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'கல்லூரி' தமன்னாவுக்கு திரையுலகில் திருப்புமுனை படமாக அமைந்தது.

35
விஜய் வர்மாவுடன் காதல் தோல்வி:

தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட துவங்கினார். குறிப்பாக தமிழில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி என பெரும்பாலான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார். அதே போல் ஒரு சில காதல் சர்ச்சைகளில் சிக்கி அதில் இருந்து மீண்டுள்ளார். கடந்த 2 வருடமாக ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலித்து வந்த நிலையில், இந்த ஆண்டு துவக்கத்தில் தான் இருவரும் தங்களின் காதலை முறித்து கொண்டனர். இதற்கான காரணத்தை இருவருமே தற்போது வரை வெளிப்படையாக கூறவில்லை.

45
ஊசி போட்டு ஸ்லிம்மாக மாறினார்?

விஜய் வர்மாவுடனான பிரேக்கப்புக்கு பின்னர், தீவிரமாக நடிப்பில் கவனம் செலுத்தி வரும் தமன்னா, தன்னுடைய உடல் எடையையும் மளமளவென குறைத்தார். சட்டென தமன்னா, 20 வயது இளம் நாயகி போல் மாறியதால்... இவர் சில ஊசி போட்டு கொண்டு தான் ஸ்லிம்மாக மாறினார் என திரையுலகினர் மத்தியில் ஒரு சர்ச்சை பரவியது.

55
தமன்னாவின் விளக்கம்:

இதற்க்கு தமன்னாவே விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். " இதுகுறித்து அவர் பேசுகையில், " என்னை பொறுத்தவரை சினிமாவில் அறிமுகமாகும் போது நான் எப்படி இருந்தேனோ அப்படியே தான் இப்போதும் இருக்கிறேன் என உணர்கிறேன். நான் எந்த ஊசியும் எடையை குறைப்பதற்காக போட்டுக்கொள்ளவில்லை. அதற்கான அவசியமும் எனக்கு ஏற்படவில்லை. பொதுவாகவே பெண்களின் உடல் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாறும் தன்மை கொண்டது. எனக்கும் அப்படித்தான். ஒரே மாதிரியாக இருக்காது. என்னை பொருத்தமட்டில் எனது உடலில் புதிதாக எதுவும் மாற்றம் தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories