13 வருடங்களுக்கு பின்னர் 'ஜெயிலர் 2' படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை!

Published : Nov 12, 2025, 06:17 PM IST

Actress Makes a Sensational Re Entry After 13 Years in Jailer 2: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் 13 வருடங்களுக்கு பின்னர் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

PREV
15
ஜெயிலர் 2 அப்டேட்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் என்றாலே, ரசிகர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பு இருப்பது உண்டு. அதுவும் ஏற்கனவே வெற்றி பெற்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் படம் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த வகையில் தான் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படம் குறித்த, சுவாரஸ்ய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.

25
புதிதாக இணைந்த நடிகர்கள்:

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், உருவாகி வரும் இந்த படத்தில்... முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், ரித்விக், யோகி பாபு, VTV கணேஷ் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. வசந்த் ரவி நடிக்கிறாரா? இல்லையா என்பதை சஸ்பென்சாக படக்குழு வைத்திருக்கும் நிலையில், முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த, மோகன் லால் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை தவிர 'ஜெயிலர் 2' படத்தில் வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

35
13 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்ட்ரி:

தலைவரை டைகர் முத்துவேல் பாண்டியனாக பார்க்க ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கும் நிலையில், தற்போது 'ஜெயிலர் 2' படத்தின் மூலம் பிரபல நடிகை 13 வருடங்களுக்கு பின்னர் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழில் ரிலீஸ் ஆன 'காதல் சொல்ல வந்தேன்' படம் மூலம் அறிமுகமானவர் தான், கன்னட திரையுலகை சேர்ந்த நடிகை மேக்னா ராஜ்.

45
மேக்னா திருமணம்:

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, 'உயர்திரு 420, நந்தா நந்திதா' போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார். தமிழில் இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காததால், கன்னட மொழி படங்களிலேயே அதிக கவனம் செலுத்தினார். முன்னணி நடிகராக இருக்கும் போதே... நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் சகோதரியின் மூத்த மகனும், நடிகருமான சிரஞ்சீவி சரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

55
13 வருடத்திற்கு பின் ரீ-என்ட்ரி:

2018-ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் நடந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சிரஞ்சீவி உயிரிழந்தபோது மேக்னா 4 மாதம் கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவருக்கு 5 வயதில் ராயன் ராஜ் சர்ஜா என்கிற மகன் ஒருவரும் உள்ளார். திருமணத்திற்கு பின்னர் திரையுலகை விட்டு மொத்தமாக ஒதுங்கிய மேக்னா சுமார் 13 வருடங்களுக்கு பின்னர் 'ஜெயிலர் 2' படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் மேக்னா ராஜ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories