அதிர்ச்சியூட்டிய ஹெச். வினோத்தின் பதில்
இப்படியானச் சூழலில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் ஹெச். வினோத்திடம் 'ஜனநாயகன்' எப்போது ரிலீஸ் ஆகும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த வினோத், "படம் வரும்போது வரும். அதை என்னால் இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது. அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ரிலீஸ் தேதி நம் கையில் இல்லை" என்று கூறினார்.
அத்துடன் நிறுத்தாமல், படம் தாமதமாவது குறித்த பின்னணி உண்மைகளைப் பற்றிப் பேசும்போது, "அந்த உண்மையைச் சொல்லும் அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை. ஒருவேளை அந்த உண்மையைச் சொல்லும் தைரியம் எனக்கு வந்தாலும், அதை அப்படியே போடும் தைரியம் உங்களுக்கு (ஊடகங்களுக்கு) இல்லை. அதனால் படம் வரும்போது பார்ப்போம்" என்று மிகவும் வெளிப்படையாகவும், அதிரடியாகவும் பேசி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். வினோத் இப்படிப் பேசும்போது அருகில் இருந்த இயக்குநர் பா. ரஞ்சித் சிரித்தது, இந்த ரிலீஸ் தள்ளிப்போவதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் காரணங்கள் ரஞ்சித்துக்கும் தெரிந்திருக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.