Movie Interval: மூவிக்கு நடுவே ஏன் “Interval”? வெறும் பாப்கார்னுக்காக இல்லை.. பின்னால் இருக்கும் சுவாரஸ்ய காரணம்!

Published : Sep 07, 2026, 04:09 PM IST

Movie Interval: மூவியில் ஏன் Interval வருகிறது தெரியுமா? Film Reel மாற்றுவது முதல் கதை சொல்லும் உத்தி, Popcorn விற்பனை வரை Interval-க்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்ய காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
15
Movie-ல் வரும் “Interval” ஏன் முக்கியம்?

திரையரங்கில் படம் பார்க்கும்போது கதை பரபரப்பாகச் சென்றுகொண்டிருக்க.. திடீரென திரையில் “INTERVAL” என்ற வார்த்தை வந்துவிடும். சிலருக்கு இது பாப்கார்ன் வாங்கும் நேரம்; சிலருக்கு கழிவறைக்குச் செல்லும் நேரம்.

ஆனால் சினிமா ரசிகர்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், Interval என்பது வெறும் இடைவேளை மட்டுமல்ல. இந்திய சினிமாவின் கதை சொல்லும் முறையிலும் அதற்கு முக்கிய பங்கு இருக்கிறது.

25
Interval எப்படி வந்தது?

இன்றைய டிஜிட்டல் ப்ரொஜெக்டர் (Digital Projector) காலத்தில், படம் ஓடுவதற்கு ரீல் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், முன்பு திரைப்படங்கள் பெரிய பெரிய film reels-ல் திரையிடப்பட்டன. குறிப்பாக நீண்ட படங்களில் ஒரு ரீல் முடிந்ததும் அடுத்த ரீலை மாற்ற projectionist-க்கு நேரம் தேவைப்பட்டது. இதனால் படத்தின் நடுவில் இடைவேளை விடும் பழக்கம் உருவானது.

ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்து டிஜிட்டல் திரையிடல் வந்த பிறகும் இந்தியாவில் Interval மட்டும் மாறவே இல்லை. அது இப்போது சினிமா கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது.

35
Interval Block ஏன் இவ்வளவு முக்கியம்?

இதுதான் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமான பகுதி. பல இந்திய திரைப்படங்களில் Interval-க்கு சில நிமிடங்களுக்கு முன்பாகவே ஒரு பெரிய திருப்பம், அதிர்ச்சி, சண்டை, அல்லது எதிர்பாராத சம்பவம் வைக்கப்படும். இதையே ரசிகர்கள் பொதுவாக “Interval Block” என்று குறிப்பிடுகிறார்கள். கதை அப்படியே நின்றுவிடாமல், அடுத்து என்ன நடக்கும்? என்ற கேள்வியுடன் ரசிகர்களை வெளியே அனுப்புவதுதான் இதன் நோக்கம்.

45
Theatre-க்கும் Interval முக்கியம்

Interval என்பது ரசிகர்கள் ஓய்வெடுக்கும் நேரம் மட்டுமல்ல. திரையரங்குகளுக்கு வருமானம் கிடைக்கும் முக்கியமான நேரமாகவும் உள்ளது. இந்த இடைவேளையில் பலரும் பாப்கார்ன், ஜூஸ், காபி, சமோசா போன்ற உணவுப் பொருட்களை வாங்குவதால் தியேட்டர்களின் உணவு விற்பனையும் அதிகரிக்கிறது.

அதுமட்டுமல்லாமல், நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் ரசிகர்களுக்கு சிறிது ஓய்வு, கழிவறை செல்வது, உணவு வாங்குவது போன்றவற்றுக்கும் இந்த இடைவேளை உதவுகிறது.

55
Hollywood படங்களில் ஏன் குறைவு?

பல நாடுகளில் நவீன திரைப்படங்கள் பொதுவாக இடைவேளையின்றி திரையிடப்படுகின்றன. டிஜிட்டல் ப்ரொஜெக்டர் வந்ததால் ரீல் மாற்ற வேண்டிய அவசியமும் இல்லாமல் போனது.

ஆனால், இந்தியாவில் Interval நீண்ட காலமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும், தியேட்டர்களின் வணிக நடைமுறையாகவும் தொடர்கிறது. இதனால் சில Hollywood படங்களுக்குக்கூட இந்திய திரையரங்குகளில் Interval சேர்க்கப்படுகிறது.

ஆனால் அந்தப் படங்கள் Interval-ஐ கருத்தில் கொண்டு உருவாக்கப்படாததால், சில நேரங்களில் முக்கியமான காட்சிக்கு நடுவிலேயே படம் நிறுத்தப்படுவது ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

இறுதியாக..

அதனால் அடுத்த முறை திரையில் “INTERVAL” வந்தால், அது வெறும் 10–15 நிமிட பிரேக் என்று நினைக்காதீங்க. அந்த இடைவேளைக்குப் பின்னால் தொழில்நுட்ப வரலாறும், திரையரங்கின் வணிகமும், அதைவிட முக்கியமாக அடுத்து என்ன நடக்கும்? என்ற ரசிகர்களின் ஆர்வத்தை உயிரோடு வைத்திருக்கும் சினிமா உத்தியும் இருக்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories