நடிகர் சல்மான் கான் இன்று தன்னுடைய 57-ஆவது பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார். வழக்கம் போல் தன்னுடைய பிறந்தநாள் பார்ட்டிக்கு பாலிவுட் திரையுலகை சேர்ந்த அனைவருக்கும் சல்மான் கான் அழைப்பு விடுத்த நிலையில், இந்த முறை சல்மான் கானின் முன்னாள் காதலை சங்கீதா பிஜ்லானி கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
மேலும் சல்மான் காணும் அவரை வழியனுப்பும் போது... அவருடைய நெற்றியில் முத்தம் கொடுத்து வழியனுப்பி வைத்தார். இந்நிலையில், சல்மான் கான் மற்றும் சங்கீதா பிஜ்லானி இருவரும் உருகி உருகி காதலித்த நிலையில், இருவரும் ஏன் பிரிந்தனர் என்பது பற்றி தகவல் சமூக வலைத்தளத்தில் வட்டமடித்து வருகிறது.
சங்கீதா பிஜ்லானி 80 மற்றும் 90 களில் முன்னணி மாடலாகவும், முன்னணி நடிகையாகவும் இருந்தவர். நடிகர் சல்மான் கானுடன் மிகவும் வலுவான காதலில் இருந்ததால்... அப்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவின. சங்கீதாவின் உறுதியான காதலை சிதற செய்தது, சல்மான் கான் இவருக்கு செய்த துரோகம் தான்.
பாலிவுட் ஃபிளே பாய்யான இவர், நடிகை சோமி அலியுடன் டேட்டிங் செய்வதை அறிந்த சங்கீதா சல்மான் கானை பிரேக் அப் செய்து பிரிந்தார். மேலும் நீண்ட நாள் காதலர் செய்த துரோகத்தை நினைத்து மன அழுத்தத்தில் இருந்த இவர், அதில் இருந்து விடுபட... தன்னுடைய நண்பர்கள் மற்றும் நடிகர், நடிகைகளுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
அப்போது சங்கீதாவிற்கு அறிமுகமானவர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், விளையாட்டு வீரருமான அசாருதீன். நட்பாக துவங்கிய இவர்களின் அறிமுகம் பின்னர் காதலாக மாறியது. சங்கீதா திருமணமாகாதவர் தான், ஆனால் அசாருதீனுக்கு, நவ்க்ரீன் என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.
சங்கீதாவை பிஜ்லானியை திருமணம் செய்து கொள்ள முதல் மனைவியை விவாகரத்து செய்த அசாருதீன், ஜீவனாம்சமாக பெரும் தொகையை முதல் மனைவிக்கு கொடுத்ததாக கூறப்பட்டது. மேலும் சங்கீதா திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்ததாகவும், இதன் காரணமாகவே இருவரும் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியது.
அஸாருதீனை திருமணம் செய்து கொள்ள, சங்கீதா பிஜ்லானி... முஸ்லீம் மதத்திற்கு மாறனார். விடாப்பிடியாக காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். முறையாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்தாலும் தற்போது வரை இருவரும், நல்ல நட்புடனே உள்ளதாக கூறப்படுகிறது.
சல்மான் கான் மற்றும் சங்கீதா பிஜ்லானி காதல் உறவு முறிந்து பல வருடங்கள் ஆகும் நிலையில், திடீர் என இவர் சல்மான் கான் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டதும், சங்கீதாவுக்கு முத்தம் கொடுத்து சல்மான் கான் வழியனுப்பியதும் பேசும் பொருளாக மாறியுள்ளது.