பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறிய பிரபலம் யார் தெரியுமா..? வெளியான பரபரப்பு தகவல்..!

First Published | Dec 26, 2020, 4:23 PM IST

ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டை விட்டு ஒரு நபர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், இன்று பிக்பாஸ் வீட்டுக்கு குட்பை சொல்ல உள்ள அந்த நபர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
 

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி கிட்ட தட்ட இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. அதனால் போட்டியாளர்களும் டைட்டில் கைப்பற்ற வேண்டும் என விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் விளையாடி வருகிறார்கள்.
இந்த முறை நாமினேஷன் பட்டியலில் ஆரி, கேப்ரியலா, ஷிவானி, ஆஜீத், அனிதா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
Tap to resize

இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் ஆரி, அடுத்த வார கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவரை போட்டியாளர்கள் அடுத்த வாரத்திற்கு நாமினேட் செய்யமுடியாது. எனவே நேரடியாக அவர் பைனலுக்கு சென்றது போல் உள்ளது என, போட்டியாளர்கள் புலம்பி வருகிறார்கள்.
எனினும் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களில் கேப்ரில்லா அல்லது ஆஜித் தான் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் அனைத்து மக்கள் மனதையும் தன்னுடைய பொறுமை, நிதானம், போன்ற நல்ல குணத்தால் இடம்பிடித்துள்ள ஆரியை அசிங்கப்படுத்துவது போல் நாக்கை நடித்து, பேசி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான அனைத்தவிற்கு ஓட்டுக்கள் தொடர்ந்து குறைய துவங்கியது.
அந்த வகையில் இந்த வாரம் அனிதா தான் குறைந்த ஓட்டுகளை பெற்றுள்ளதாகவும், எனவே அவர் தான் வெளியேறும் நபராக இருக்க கூடும் என கூறப்படுகிறது.
மக்கைளின் எதிர்பார்ப்பு படியே அனிதா தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என கூறப்படுகிறது. ஆரி வெளியேறுவார் என நினைத்த அனிதாவுக்கு இது மிகப்பெரிய ட்விஸ்ட்டாக இருக்கும் என்பதில் ஆச்சர்யம் இல்லை.

Latest Videos

click me!