BiggBoss 5: ஸ்கெச் போட்ட பிக்பாஸ்.. இந்த முறை டைட்டில் வின்னர் இவர்களில் ஒருவரா? பக்காவாக கணித்த ரசிகர்கள்!

Published : Dec 25, 2021, 04:05 PM IST

தமிழில் கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி (Biggboss tamil 5) இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைய உள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றியாளர் யாராக இருக்க வேண்டும் என்பதை, பிக்பாஸ் நிகழ்ச்சி பக்காவாக ஸ்கெச் போட்டு கொண்டு செல்வதாகவும், எனவே இவர்களில் ஒருவர் தான் வெற்றியாளர் என இப்போதே கணித்து கூற துவங்கி விட்டனர் பிக்பாஸ் ரசிகர்கள்.  

PREV
18
BiggBoss 5: ஸ்கெச் போட்ட பிக்பாஸ்.. இந்த முறை டைட்டில் வின்னர் இவர்களில் ஒருவரா? பக்காவாக கணித்த ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை கடந்துள்ள நிலையில்... இந்த வாரம் போட்டியாளர்களின் எமோஷனை வெளிக்கொண்டு வரும் டாஸ்கான ஃப்ரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது.

 

28

சுமார் மூன்று மாதங்களாக தங்களுடைய குடும்பத்தை கண்ணில் கூட பார்க்காமலும், அவர்களது குரலை கேட்காமலும் வாழ்ந்து வந்த போட்டியாளர்கள்  திடீர் என அவர்களை கண்டதும் கட்டிப்பிடித்து, கண்ணீர் பொங்க தங்களுடைய அன்பை காட்டியது ரசிகர்கள் நெஞ்சங்களையயே உருக வைத்துள்ளது.

 

BiggBoss5

38

போட்டியாளர்களின் வீட்டில் இருந்து வந்தவர்கள் அரசல் புரசலாக... வெளியில் உள்ளவர்கள் அவர்களை எப்படி பார்க்கிறார்கள், யாரால் பிரச்சனை என்பதை சூசகமாக கூறி சென்றதால், போட்டியாளர்கள் தற்போது குழப்பம் அடைந்திருந்தாலும்,  குடும்பத்தினரை பார்த்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

 

48

இது ஒரு புறம் இருக்க, ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற போட்டியாளராக இருந்த இமான் அண்ணாச்சி வெளியேறியது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

 

 

58

எனவே தற்போது பிக்பாஸ் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு, இரு போட்டியாளர்களில் ஒருவரை தான் ஜெயிக்க வைக்க போராடி வருவது போல் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் பிக்பாஸ் ரசிகர்கள்.

 

 

68

அந்த வகையில் விஜய் டிவியில் இருந்தே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இருவருடைய பெயர் தான் இதில்  பெற்றுள்ளது.

 

 

78

ப்ரியங்கா அல்லது ராஜூ தான் டைட்டிலை பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கணித்து கூறி வருகிறார்கள் பிக்பாஸ் ரசிகர்கள். மற்ற போட்டியாளர்கள் கடுமையாக போட்டியை எதிர்கொண்டாலும் வெற்றி பெரும் வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.

 

 

88

வழக்கம் போல் இதுவரை பிக்பாஸ் ரசிகர்கள் கணித்து கூறிய அனைத்துமே பலித்துள்ளது. எனவே இந்த விஷயத்திலும் பிக்பாஸ் ரசிகர்களின் கணிப்பு பலிக்குமா இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories