அதன்பின்னர் ஏவிஎம் நிறுவனம் தொட்டதெல்லாம் வெற்றியாகவே அமைந்தது. எம்ஜிஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களை உச்சத்துக்கு கொண்டு சென்றதில் ஏவிஎம் நிறுவனத்துக்கும் பங்கு உண்டு. மெய்யப்ப செட்டியாருக்கு பின் ஏவிஎம் நிறுவனத்தை கட்டிக் காத்தவர் தான் ஏவிஎம் சரவணன். சம்சாரம் அது மின்சாரம், முந்தானை முடிச்சு போன்ற தமிழ் சினிமாவின் மாஸ்டர் பீஸ் படங்களை தயாரித்தது சரவணன் தான்.
ரஜினிகாந்துக்கு முரட்டுக்காளை தொடங்கி சிவாஜி தி பாஸ் வரை ஏவிஎம் நிறுவனம் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக அந்நிறுவனத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு படம் பண்ண வேண்டும் என்கிற முடிவில் இருந்தார் ரஜினி. அந்த அளவுக்கு ஏவிஎம் நிறுவனம் மீது ரஜினிக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. நடிகர் சூர்யாவின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான அயன், ஏவிஎம் தயாரிப்பில் உருவானது தான்.
இப்படி கோலிவுட்டின் முதுகெலும்பாக இருந்த வந்திருக்கிறது ஏவிஎம் நிறூவனம். அதன் உரிமையாளராக இருந்த ஏவிஎம் சரவணன், வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86. ஏவிஎம் சரவணனின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாக உள்ளது. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.