சிவன் பாடலை காதல் பாடலாக மாற்றி... ஏ.ஆர்.ரகுமான் - ஷங்கர் கூட்டணி தந்த மாஸ்டர் பீஸ் சாங்..!

Published : Dec 03, 2025, 04:59 PM IST

சிவன் பாடல் ஒன்று இயக்குநர் ஷங்கரின் படத்தில் காதல் பாடலாக வந்ததை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த மாஸ்டர் பீஸ் பாடலைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

PREV
14
AR Rahman Song Secret

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் பணியாற்றும் அனைத்து இயக்குநர்களுக்கும் தரமான பாடல்களை கொடுப்பார். ஆனால் அவர் ஒரு சில இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்தால், அப்படத்தின் பாடல்கள் கூடுதல் ஸ்பெஷலாக இருக்கும். அப்படி ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து பல சூப்பர் ஹிட் பாடல்களை வாங்கிய இயக்குநர் தான் ஷங்கர். அவர் இயக்கிய ஒரு சூப்பர் ஹிட் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான், சிற்றிலக்கியத்தில் இருந்து பாடல் வரிகளை எடுத்து, அதை அழகான ஹீரோயின் இண்ட்ரோ பாடலாக கொடுத்திருக்கிறார். அந்த பாடல் பற்றி இங்கே விரிவாக காணலாம்.

24
சிவன் பாடலை காதல் பாடலாக மாற்றிய ரகுமான்

18ம் நூற்றாண்டில் திருகூடராசப்ப கவிராயர் எழுதிய ஒரு சிற்றிலக்கியம் தான், திருக்குற்றாலக் குறவஞ்சி. அதில் குற்றாலத்தை பற்றியும், அங்கு சிவனாக வீற்றிருந்த குற்றாலநாதர் பற்றியும் அந்த ஊரில் இருக்கின்ற வசந்தவள்ளி என்கிற பெண்ணைப் பற்றியும், சொல்வது தான் இந்த குற்றாலக் குறவஞ்சி என்கிற சிற்றிலக்கியம்.

34
எந்த பாட்டு தெரியுமா?

ஒரு நாள் குற்றால நாதரான சிவன் திருவீதி உலா வருகிறார். அந்த நேரத்தில் வசந்தவள்ளி அவளுடைய தோழிகளுடன் அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது வசந்த வள்ளியை வர்ணித்து திருகூட ராசப்பக் கவிராயர் எழுதிய ஒரு அறிமுக பாடல் வரிகள் தான், “இந்திரையோ... இவள் சுந்தரியோ, தெய்வ ரம்பைய மோகிணியோ...” என்பது. இந்த வரியை எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதா. அது வேறு எங்கேயும் இல்லை, ஷங்கர் இயக்கிய காதலன் திரைப்படத்தில் தான்.

44
செம ஹிட் அடித்த பாடல்

இவள் தேவதையா... தேவ லோகத்து மங்கையா... பேரழகியா அப்படிங்குற ஆச்சர்யங்களோடு வசந்த வள்ளியை வர்ணித்து அந்த வரிகளை எழுதி இருப்பார் திரிகூட ராசப்ப கவிராயர். பொதுவாக சிற்றிலக்கியங்களே அழகு தான், அந்த சிற்றிலக்கிய வரிகளை ஏ.ஆர்.ரகுமானின் மனதை வருடும் இசையோடு கேட்கும் போது அது கூடுதல் அழகாக இந்த பாடல் மூலம் பிரதிபலிக்கிறது. இந்தப் பாடல் வந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகியும் அதற்கான மவுசு குறையவில்லை.

Read more Photos on
click me!

Recommended Stories