மகாநடி சாவித்திரியின் துயரமான காலகட்டத்தை இந்த கட்டுரை விவரிக்கிறது. அவரது வீழ்ச்சியின் போது 'காதல் மன்னன்' ஜெமினி கணேசன் என்ன செய்தார், அவர்களின் உறவின் சிக்கல்கள் மற்றும் சாவித்திரியின் மாறாத ஈகை குணம் ஆகியவற்றை இது ஆராய்கிறது.
தென்னிந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற அரசியாக, 'மகாநடி'யாக வலம் வந்தவர் சாவித்திரி. ஒரு பக்கம் புகழின் உச்சி, மறுபக்கம் சொத்துக்கள் பறிபோன துயரம் என அவரது வாழ்க்கை ஒரு முழுநீளத் திரைப்படத்தையே மிஞ்சும் ரகம். குறிப்பாக, அவரது சாம்ராஜ்யம் சரிந்தபோது, 'காதல் மன்னன்' ஜெமினி கணேசன் என்ன செய்துகொண்டிருந்தார் என்பது இன்றும் பலரால் கேட்கப்படும் ஒரு மில்லியன் டாலர் கேள்வி!
26
மழை இரவில் தொடங்கிய மர்மக் காதல்!
ஆரம்பத்தில் ஜெமினி கணேசனுக்கும் சாவித்திரிக்கும் இடையே மலர்ந்த காதல், ஒரு சினிமா காட்சிக்கும் மேலானது. ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்த ஜெமினியின் இல்லத்திற்கு, ஒரு நள்ளிரவு மழையில் தஞ்சம் தேடி வந்தாராம் சாவித்திரி. அப்போது அவருக்கு அடைக்கலம் கொடுத்த ஜெமினிகணேசன் பின்னர் தாலிகட்டினாராம். ஆனால், இந்தக் காதல் ஒரு கட்டத்தில் பெரும் 'பொசசிவ்' உணர்வாக மாறியது. "நீ முதல் மனைவி வீட்டுக்குச் சென்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன்" என்று சாவித்திரி மிரட்டியதால், ஜெமினி ஒரு 'இரட்டை வாழ்க்கை' வாழ வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். பகலில் ஒரு வீடு, இரவில் சாவித்திரி என அந்த காதல் மன்னன் ஊசலாடிக்கொண்டிருந்தார் என சினிமா வட்டாரங்களில் மட்டுமல்லாமல், ஜெமினியின் உறவினர்களும் கூறுகின்றனர்.
36
சாம்ராஜ்யம் சரிந்தபோது... ஜெமினி எங்கே?
சாவித்திரியின் வீழ்ச்சிக்கு அவரது அதீத நம்பிக்கையும், 'பிராப்தம்' போன்ற படங்களின் தோல்வியும் முக்கியக் காரணம். கோடிக்கணக்கான சொத்துக்கள் பறிபோய், வருமான வரிச் சோதனையில் சிக்கித் தவித்தபோது, சாவித்திரி மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் உடைந்து போனாராம்.
மௌன சாட்சியான ஜெமினி
அதன் பிறகு ஜெமினி - சாவித்திரி இடையே எழுந்த மனஸ்தாபம் இருவருக்கும் இடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஒருவர் மீது ஒரவர் அளவு கடந்த அன்பை செலுத்தியதே அதற்கு காரணம் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால், தனது சாம்ராஜ்யம் சிதைவதைக் கண்டு சாவித்திரி துடித்தபோது, அதைத் தடுக்க முடியாமல் ஜெமினி கணேசன் இருந்தாராம்.
சாவித்திரி கோமா நிலைக்குச் சென்று உயிருக்குப் போராடிய 19 மாதங்களும், ஜெமினி கணேசன் ஒரு குற்ற உணர்ச்சியில் தவித்ததாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. காதல் மன்னனால் தன் காதலியைத் துயரத்திலிருந்து மீட்க முடியாமல் போனது ஒரு வரலாற்றுச் சோகம்.
56
இறுதி வரை மாறாத 'வள்ளல்' குணம்!
செல்வங்கள் கரைந்து, வறுமையின் பிடியில் சிக்கியபோதும் சாவித்திரி என்ற 'நடிகையர் திலகம்' தனது ஈகை குணத்தை மட்டும் விட்டுக்கொடுக்கவில்லை. போர் நிதிக்காகத் தான் அணிந்திருந்த அத்தனை நகைகளையும் மேடையிலேயே கழற்றிக் கொடுத்த அந்தத் தாராள மனசு, வேறெந்த நடிகைக்கும் வராத ஒன்று. தன் வீட்டில் வறுமை தாண்டவமாடிய போதும், தன்னைத் தேடி வந்து "பசி" என்றவர்களுக்கு, வீட்டில் இருந்த விலை உயர்ந்த பாத்திரங்களைக் கொடுத்தாவது அவர்களின் பசியைப் போக்கினார்.
66
மகாநடிகை சொல்லி சென்ற பாடம்
சாவித்திரியின் வாழ்க்கை நமக்குச் சொல்வது ஒன்றுதான் - "புகழும் பணமும் நிரந்தரமல்ல, ஆனால் நாம் செய்த தர்மமும் காட்டிய அன்பும் மட்டுமே காலத்தை வென்று நிற்கும்." சாவித்திரி வீழ்ந்தபோது ஜெமினி தவித்த தவிப்பு ஒரு பக்கமிருக்க, இன்று நாம் நினைவுகூர்வது அந்தப் பேரரசியின் நடிப்பையும், அவரது மாறாத வள்ளல் குணத்தையும் மட்டுமே!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.