தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடகராக வலம் வந்த டி.எம்.செளந்தரராஜன், டி.ராஜேந்தருக்கு பாடிய ஒரே ஒரு பாடலால் தன்னுடைய ஒட்டுமொத்த கெரியரே முடிந்துபோனதாக கூறி இருக்கிறார்.
தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம் என்றே டி.ராஜேந்தரை சொல்லலாம். நடிப்பு, டைரக்ஷன், இசை, பாடல்கள், என அனைத்திலும் சிறந்து விளங்கினார். இவர் அறிமுகமான படம் ‘ஒரு தலை ராகம்’. அப்படத்தை ஏ டூ இசட் எல்லாவற்றையும் அவரே பார்த்து பார்த்து செதுக்கி இருந்தாலும் அதில் டி.ராஜேந்தருக்கு போதிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. ஒரு தலை ராகம் படத்தின் கதையோடு வந்த டி ராஜேந்தர், அதற்காக தயாரிப்பாளரை தேடி அலைந்த போது, வெளிநாட்டு சம்பாத்தியத்தில் செல்வ செழிப்போடு இருந்த இப்ராஹிம் என்பவரை சந்தித்திருக்கிறார்.
25
ஒரு தலை ராகம் பட சீக்ரெட்
ஒரு தலை ராகம் படத்தின் கதையை கேட்டதும் தயாரிக்க ஓகே சொன்ன இப்ராஹிம், டி ராஜேந்தருக்கு ஒரே ஒரு கண்டிஷனை மட்டும் போட்டிருக்கிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றில் மட்டும் உன் பெயரை பயன்படுத்துக்கொள், ஆனால் படத்தை நான் தான் இயக்குவேன் என சொல்லி படப்பிடிப்பையும் ஆரம்பித்திருக்கிறார். ஆனால் இப்ராஹிம்மால் படத்தை சரிவர எடுக்க முடியவில்லை. இதனால் சுதாரித்துக் கொண்ட டி.ராஜேந்தர், பெரிய மனசோடு, மீதி படத்தை நானே இயக்கிவிடுகிறேன், ஆனால் பெயரை மட்டும் நீங்களே போட்டுக் கொள்ளுங்கள் என சொல்லி இருக்கிறார்.
35
படம் பார்க்காத டி.ராஜேந்தர்
படத்திற்கு டி.ராஜேந்தர் தான் இசையமைத்து இருந்தார். படம் வெளியாகி இரண்டு நாட்கள் காத்துவாங்கியது. அதன்பின்னர் பாடல்கள் பரவலாக கவரத் தொடங்கியதை அடுத்து தியேட்டருக்கு மக்கள் படையெடுத்து வந்தனர். இப்படத்தை ரசிகர்களோடு பார்க்க தியேட்டருக்கு போன் டி.ராஜேந்தர், டைட்டில் கார்டு போடும் போதே அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாராம். அந்த டைட்டில் கார்டில் பின்னணி இசை என வேறு ஒருவரின் பெயரை போட்டிருக்கிறார்கள். தான் கஷ்டப்பட்டு போட்ட பின்னணி இசையை நீக்கியது தெரிந்ததும் மனமுடைந்து தியேட்டரை விட்டு வெளியேறி இருக்கிறார் டி.ஆர். இன்றுவரை அவர் ஒரு தலை ராகம் படத்தை பார்த்ததில்லை.
இந்த ஒரு தலை ராகம் படம் புகழ்பெற்ற பாடகர் டி.எம்.செளந்தரராஜனின் கெரியரை முடித்துவிட்ட படம் என்று சொன்னால் நம்ப முடிகிறது. இதனை டி.எம்.எஸ் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இப்படத்திற்கு பாடல் பாட அவரை டி.ராஜேந்தர் அணுகியபோது, என்ன பாட்டு பாடணும் என டி.எம்.எஸ் கேட்க, இரண்டு பாடல்கள் உங்கள் குரலில் பதிவு செய்ய இருப்பதாக சொன்ன டி.ராஜேந்தர். முதல் பாடலாக ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’ என்கிற பாடலை பாடச் சொல்லி லிரிக்ஸை டி.எம்.எஸிடம் கொடுத்திருக்கிறார். இது என்ன அபசகுணமான வரிகளாக இருக்கிறது. இதை நான் பாடமாட்டேன் என சொல்லி இருக்கிறார்.
55
ஒரு தலை ராகம் மூலம் முடிவுக்கு வந்த டி.எம்.எஸ் கெரியர்
அதன்பின்னர் அவரை பேசி சமாதானப்படுத்தி, அது படத்தின் சிச்சுவேஷனுக்கு ஏற்ப எழுதப்பட்ட வரிகள் அதற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என சொல்லி பாட வைத்திருக்கிறார். அடுத்த பாடல் என்ன என டி.எம்.எஸ் கேட்க, ‘என் கதை முடியும் நேரமிது’ என்கிற சோகப் பாடலின் வரிகளை கொடுத்திருக்கிறார். ஆனால் அப்பாடலைப் பாடிய பின்னர் டி.எம்.எஸுக்கு தமிழ் சினிமாவில் பாட வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழ் சினிமாவில் அவரது கதையை முடித்த பாடலாக ஒரு தலை ராகம் பட பாடல்கள் அமைந்துவிட்டன. அதன்பின்னர் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் மட்டுமே பாடி வந்தார் டி.எம்.எஸ்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.