நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' திரைப்படமும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'துணிவு' திரைப்படமும் இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது. இந்த இரு படங்களிலுமே, அதிக ரசிகர்களைக் கொண்ட கோலிவுட் டாப் ஹீரோக்கள் நடித்துள்ளதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல் அஜித் நடித்துள்ள 'துணிவு' படத்தை, ஏற்கனவே அஜித்தை வைத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ள இயக்குனர் எச்.வினோத் மூன்றாவது முறையாக இயக்கி உள்ளதால், கண்டிப்பாக இந்த திரைப்படம் ஹார்டிக் வெற்றி பெறும் என அஜித் ரசிகர்கள் இந்த படத்தை வரவேற்க காத்திருக்கிறார்கள்.
இதன் மூலம் அஜித், எவ்வித பொறாமையும், வெறுப்பும் இன்றி ரசிகர்கள் இரண்டு படங்களுக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாக கூறப்பட்டது.
அப்போது விஜய் மிகவும் சந்தோஷமாக... "ஏய் ஜாலிப்பா வரட்டும் பா... அவரும் நம்ப நண்பர் தானே! அந்த படமும் நல்லா போட்டும் நம்ப படமும் நல்லா போட்டும் என மிகவும் பாசிட்டிவாக கூறியதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாக, விஜய்யின் இந்த பண்பு அவரின் உயர்ந்த உள்ளத்தை காட்டுவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.