சங்கீதா 1972-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி லண்டனில் பிறந்தவர் ஆவர். இவர் ஒரு புலம்பெயர்ந்த இலங்கை தமிழர் ஆவார். சங்கீதாவின் தந்தை சொர்ணலிங்கம் லண்டனில் மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார்.
பூவே உனக்காக படத்தை பார்த்த பின்னர், விஜய்யின் தீவிர ரசிகையாக மாறிய சங்கீதா, விஜய்யை பார்ப்பதற்காகவே லண்டனில் இருந்து சென்னை வந்தார். விஜய்யுடன் நட்பாக பழகிய சங்கீதா, பின்னர் அவரை காதலிக்க தொடங்கினார். பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் விஜய்யை திருமணம் செய்து கொண்டார்.