நாளுக்கு நாள் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பும், அவர் தேர்வு செய்யும் கதைகளும் அவரது சம்பளத்தை கூட்ட உதவுவதோடு அவரை சினிமாவின் அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்கிறது. அப்படித்தான் கடைசியாக அவரது நடிப்பில் வந்த புஷ்பா 2 திரைப்படத்தில் Expression குயினாக ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தனர்.
26
Rashmika Mandanna chhaava movie
கீதா கோவிந்தம் படத்தில் துவங்கி, டியர் காம்ரேட், பீஷ்மா, புஷ்பா, வாரிசு, அனிமல், புஷ்பா 2 என்று மாஸ் தொடர்ந்து மாஸ் படங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடிக்கிறார். இவரை ஹீரோயினாக நடிக்க வைக்க பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்ற்னர். மேலும் ராஷ்மிகா கேட்கும் சம்பளத்தையும், வாரி வழக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.
இவர் நடித்த அனிமல், வாரிசு, புஷ்பா ஆகிய படங்களின் வசூல் மட்டும் சுமார் 3000 கோடியை கடந்து, இதுவரை அதிக வசூல் சாதனை செய்த படங்களில் நடித்த நாயகி என்கிற அங்கீகாரத்தையும் பெற்று தந்தது.
46
Rashmika Mandanna About Retainment
தற்போது வரலாற்று கதைக்களத்தில் எடுக்கப்பட்டுள்ள படத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார். லக்ஷ்மன் உடேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விக்கி கவுஷல் கதாநாயகனாக நடித்துள்ளார். சாவா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாலிவுட் படத்தில் ராஷ்மிகா மந்தனா மராட்டிய ராணி, மகாராணி யேசுபாய் போன்சலேவாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சாவா படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி தேதி காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த நிலையில் தான் இந்தப் படத்தில் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசும் போது, ராஷ்மிகா மந்தனா தனது ஓய்வு பற்றி பேசி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த படத்தோடு நான் ஓய்வு பெற்றாலும் அது எனக்கு சந்தோஷம் தான் என்று கூறியிருக்கிறார்.
66
Rashmika About Character
மும்பை பிளாசா தியேட்டரில் நடைபெற்ற இந்த நிகழ்வில், படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். ராஷ்மிகா காலில் அடிபட்டிருந்தாலும், காலில் கட்டோடு நொண்டியடித்தபடி வந்தார். அப்போது பேசிய ராஷ்மிகா மந்தனா, இந்த ரோல் கொடுத்த மூவி டீமுக்கு நன்றி. மகாராணி யேசுபாயாக நடிப்பது சினிமா வாழ்க்கையில் நான் செய்த பாக்கியம். நான் ஓய்வு பெற்றாலும் மகிழ்ச்சி தான் என்று கூறியிருக்கிறார். சாவா படத்தில் அக்ஷய் கன்னா, அசுதோஷ் ராணா, திவ்யா தத்தா, வினீத் குமார் சிங், பிரதீப் ராவத், சந்தோஷ் ஜூவேகர் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் 19ஆம் தேதி சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்திக்கு முன்னதாக 14ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.