அடேங்கப்பா உலக மகா நடிகன் சித்தார்த்... விமான நிலைய அதிகாரி விளக்கத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்!

First Published Dec 29, 2022, 11:35 PM IST

நடிகர் சித்தார்த் மதுரை விமான நிலையத்தில் பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் தங்களை இந்தியில் பேச சொல்லி கடுமையாக நடத்தியதாக குற்றம் சாட்டி இருந்த நிலையில், விமான நிலையத்தில் என்ன நடந்தது? என்பது குறித்து அதிகாரி ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சித்தார்த், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில்... மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள், தங்களை ஹிந்தியில் பேச சொல்லி நிர்பந்தித்ததாகவும் ஆங்கிலத்தில் பேச மறுத்து விட்டதாகவும், அதே போல் தன்னுடைய பெற்றோர் வயதானவர்கள் என்பது கூட கருத்தில் கொள்ளாமல், 20 நிமிடம் அவர்களை காக்க வைத்ததோடு அவர்கள் பையில் இருந்த சில்லறை காசு போன்றவற்றை எடுத்து காட்ட சொல்லியதாக கடுமையாக சாடி இருந்தார்.
 

இதைத்தொடர்ந்து ஏற்கனவே ராணுவ வீரர் ஒருவர், சித்தார்த்தின் செயலுக்கு மிகவும் கடுமையாக தன்னுடைய எதிர்ப்பை வீடியோ மூலம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மதுரை விமான நிலைய அதிகாரி ஒருவர், விமான நிலையத்தில் என்ன நடந்தது? என்பது குறித்து கூறியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
 

இது குறித்து அந்த அதிகாரி கூறுகையில்... "நடிகர் சித்தார்த் மற்றும் அவருடைய குடும்பத்தினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் சோதனை கூடத்திற்கு மாலை 4:15 மணி போல் வந்ததாகவும், அவர்களிடம் முக கவசத்தை விளக்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டதாகவும், பின்னர் அவர்களின் அடையாள அட்டை, அவருடைய குடும்பத்தினரின் உடமைகள், சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். இது அனைத்து பயணிகளுக்குமே உண்டான வழக்கமான நடைமுறைதான். குறிப்பாக நடிகர் சித்தார்த்தை சோதித்தது பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் வீரர்தான் என்றும் அவர் தஞ்சாவூர் மாவட்டத்தை செய்த தமிழ் பெண்தான் என கூறியுள்ளார்.
 

சித்தார்த்தை தொடர்ந்து அந்த பெண் தான், அவரின் குடும்பத்தினரையும், அவர்களின் உடைமைகளையும் சோதித்துப் பார்த்தார். இதனால் சித்தார்த் மட்டுமின்றி, அவருடைய குடும்பத்தினரும் கோபமடைந்தனர். அந்த பெண்ணிடம் கோபப்படும் படி நடந்து கொண்டாலும்... அந்தப் பெண் எவ்வித தயக்கமும் இன்றி அமைதியான முறையில் தன்னுடைய வழக்கமான பணியை செய்தார். அதேபோல் அந்தப் பெண் இந்தியில் பேசாமல் தமிழில் தான் பேசினார். 
 

இந்த சோதனை முடிந்த பின்னர் அடுத்த சோதனைக்கான அதிகாரி அறைக்கு வந்தனர். அங்கு இருந்தவர் தெலுங்கு பேசுபவர். அவருடனும் சித்தார்த் எதற்கு அடிக்கடி பரிசோதிக்கப்படுகிறது என விளக்கம் கேட்டார். சரியாக பத்து நிமிடத்திற்குள் அங்கிருந்து கோபித்துக் கொண்டு நடிகர் சித்தார்த் விமானம் ஏறும் இடத்திற்கு சென்று விட்டார். அதேபோல் அவருடன் வந்தவர்களும் அங்கிருந்து சென்று விட்டனர். அவருடன் வந்தவர்கள் தான் அவ்வபோது இந்தியில் பேசினார்களே தவிர, பணியில் இருந்தவர்கள் யாரும் இந்தி மொழியில் பேசவில்லை. இதற்கான சிசிடிவி பதிவுகளும் மதுரை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கேமராவில் பதிவாகியுள்ளதாக சித்தார்த்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
 

அதிகாரியின் இந்த விளக்கத்தை கேட்ட நெட்டிசன்கள் சித்தார்த் உண்மையிலேயே பெரிய நடிகர் தான்... என விமர்சித்து வருகின்றனர். இந்த அதிகாரியின் பதிலடிக்கு சித்தார்த் என்ன சொல்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

click me!