இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விஜய் - அஜித் என இரு டாப் நடிகர்கள் படங்களும் வெளியாக உள்ளது. சுமார் 9 வருடங்களுக்கு பின் அஜித் - விஜய்யின் படங்கள் பண்டிகை நாளை குறிவைத்து, ஒரே நாளில் வெளியாக உள்ளதால், இருதரப்பு ரசிகர்களும், இந்த இரண்டு படங்களையும் வரவேற்க தயாராக உள்ளனர். அதே போல் இரண்டு நடிகர்கள் யார் பெரிய நடிகர் என்கிற வாக்குவாததில் வழக்கம் போல் இருதரப்பு ரசிகர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.
தற்போது வெளியாகியுள்ள தகவலின் இரு நடிகர்களுக்கும் கோலிவுட் திரையுலகில் அதிக ரசிகர்கள் உள்ளதால், திரையரங்குகள் சமமாக பிரித்து, 400 திரையரங்குகள் வாரிசுக்கு, 400 திரையரங்குகள் துணிவுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், விஜய் தான் வசூல் மன்னன் என்றும், அவர் நடிப்பில் கடைசியாக வெளியான 5 படங்கள் அஜித் படத்தை விட அதிகமாக வசூல் செய்துள்ளதால், விஜய்யின் படத்திற்கு... தமிழகத்தில் அஜித்தின் 'துணிவு' படத்தை விட அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டும் என, 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு கொடுத்துள்ள பேட்டி அஜித் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது.
மேலும் இரண்டு படங்களுக்கும், மிகவும் பரபரப்பாக புரொமோஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் தான் 'வாரிசு' படத்திற்கு ரயிலில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்ததாக விஜய் ரசிகர்கள் அந்த புகைப்படங்களை வெளியிட்டு தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
ஆனால் அதே அஜித் ரசிகிர்... விஜய் - அஜித்துக்கு ஒரே போஸ்டர் அடித்து... இரு படங்களும் பொங்கலுக்கு வெளியாவது, இருபெரு திருவிழா என்றும், இந்த பொங்கலை சும்மா செய்றோம் என 'வாரிசு' மற்றும் 'துணிவு' ஆகிய இரு படங்களும் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ள ஒட்டியுள்ள போஸ்டர் விஜய் ரசிகர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் இரு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அஜித்தின் துணிவு திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதியும், 'வாரிசு' திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதியும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.