இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் லாஸ்லியா. இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தார். அந்நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கவினை காதலித்த லாஸ்லியா, வெளியே வந்ததும் அவரை பிரேக் அப் செய்து பிரிந்தார்.
இதன்பின் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. இதனால் சுதாரித்துக் கொண்ட லாஸ்லியா, சட்டென கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார். விதவிதமான கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் லாஸ்லியா. பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக தான் அவர் இவ்வாறு கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில், தற்போது கொசுவலை போன்ற கருப்பு நிற சேலையும், ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டும் அணிந்து அவர் நடித்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரலாக பரவி வருகின்றன. குஷி ஜோதிகாவை மிஞ்சும் விதமாக லாஸ்லியாவின் இந்த போட்டோஷூட் அமைந்துள்ளதாக அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... 'தசாவதாரம்' கமல்ஹாசனை மிஞ்சிய சூர்யா..! 42-வது படத்தில் 13 கெட்டப்பில் நடிக்கிறாரா?