துணிவு படத்தை பார்ப்பதற்கான 5 முக்கியமான காரணங்கள் என்னென்ன?

Published : Jan 08, 2023, 05:07 PM IST

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11 ஆம் தேதியே திரைக்கு வருகிறது.

PREV
16
துணிவு படத்தை பார்ப்பதற்கான 5 முக்கியமான காரணங்கள் என்னென்ன?
காரணம் 1: அஜித் குமார்:

துணிவு படத்தை பார்க்க முக்கியமான காரணமே இது அஜித் படம் என்பது தான். அவரை திரையில் பார்த்தால் தான் உண்டு. மற்றபடி, பைக் ரேஸ், விமான நிலையம், துப்பாக்கிச்சுடும் போட்டி போன்ற இடங்களில் அவரைக் காண முடியும். அவ்வளவு தான், அஜித்தை பார்ப்பதற்கு எத்தனையோ கோடி பேர் தவமாய் தவமிருக்கும் நிலையில், அவர் நடித்து வெளிவரும் துணிவு படத்தை பார்க்காமலா விட்டு விடுவார்கள்? இந்த படத்தில் அஜித்தின் கெட்டப், ஸ்டைல், டயலாக் பேசும் விதம் எல்லாமே மாஸாக இருக்கிறது.

26
காரணம் 2: இயக்குநர் ஹெச் வினோத்:

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து ஹெச் வினோத் மற்றும் அஜித் குமார் காம்பினேஷனில் துணிவு படம் உருவாக்கப்பட்டுள்ளது. வங்கி கொள்ளையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தாலும், ஃபர்ஸ்ட் ஆஃப் அஜித் ரசிகர்களுக்காகவும், இரண்டாம் பாதி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் கூறியிருக்கிறார். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.

36
காரணம் 3: ஜிப்ரான் இசை:

போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். முதல் முறையாக அஜித் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இதற்கு முன்னதாக வலிமை படத்திற்கு பின்னணி மட்டும் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. துணிவு படத்தில் இடம் பெற்றுள்ள ஜில்லா ஜில்லா, காசேதான் கடவுளடா, கேங்க்ஸ்டா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. பாடல்கள் மட்டுமின்றி பாடலுக்கு அஜித் ஆடிய நடனமும் ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இது ஜிப்ரானின் 50ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

46
காரணம் 4: மஞ்சு வாரியர்:

முதல் முறையாக மஞ்சு வாரியர், அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்தப் படத்தில் வரும் காசேதான் கடவுளடா என்ற பாடலில் பாடவும் செய்துள்ளார். இந்தப் படத்தில் இவரது நடிப்பைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் பலரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அஜித்துடன் இணைந்து சமுத்திரக்கனி, பிரேம் குமார், பகவதி பெருமாள், ஜிபி முத்து, மோகன சுந்தரம், அஜய், சிபி புவனா சந்திரன், சிராக் ஜானி, மமதி சாரி, மகாநதி சங்கர் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
 

56
காரணம் 5: ஜிபி முத்து (ஜிபி முத்து ரசிகர்களுக்காக)

டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து இந்தப் படத்தில் நடித்துள்ளார். இதில், அஜித் உடன் ஜிபி முத்துவிற்கு காம்பினேஷன் இருக்குமா? இல்லை மற்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளாரா? எத்தனை காட்சிகளில் வருவார் என்றெல்லாம் தெரிந்து கொள்ள ஜிபி முத்து ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். விஜய் டிவியில் அடுத்து ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 4ல் ஒரு கோமாளியாக ஜிபி முத்து கலந்து கொள்ள இருக்கிறார். சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

66
காரணம் 6: துணிவு டிரைலர்: ஆக்‌ஷன் காட்சிகள்

துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், டிரைலரில் வரும் காட்சிகள், படமாக்கப்பட்ட விதம் எல்லாமே பிரமாதம். 1.52 நிமிடம் ஓடும் இந்த டிரைலர் முழுவதிலும் வங்கியில் கொள்ளையடிப்பதையும், போலீஸ், மிலிட்டரியிடம் பேசுவது போன்றும் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வர்த்தக பங்கு மதிப்பு குறைவது பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஆகையால், தான் இந்தப் படம் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு படமாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் சென்டிமெண்ட் காட்சிகளுக்குப் பதில் ஆக்‌ஷன் காட்சிகள் தான் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories