'மைனா' படத்தில் அமலா பாலுக்கு பதில் நடிக்க இருந்தது இந்த நடிகையா? ஆச்சர்ய தகவல்..!

Published : May 16, 2021, 04:51 PM IST

இந்நிலையில் இந்த படத்தில், அமலா பாலுக்கு முன் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் 11 வருடத்திற்கு பின் வெளியே வந்துள்ளது.  

PREV
17
'மைனா' படத்தில் அமலா பாலுக்கு பதில் நடிக்க இருந்தது இந்த நடிகையா? ஆச்சர்ய தகவல்..!

இயக்குனர் பிரபு சாலமன், கதை, திரைக்கதை எழுதி, இயக்கிய திரைப்படம் 'மைனா' காதல் ஜோடிகளின் எதார்த்தமான காதலை கூறிய இந்த படம், அமலாபாலின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் இந்த படத்தில், அமலா பாலுக்கு முன் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் 11 வருடத்திற்கு பின் வெளியே வந்துள்ளது.

27

2010 ஆம் ஆண்டு வெளியான 'மைனா' படத்தில், விதார்த் ஹீரோவாகவும், அமலா பால் ஹீரோயினாகவும் நடித்திருந்தனர்.

37

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், சேது, தம்பி ராமையா, சூசன், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார்.

47

ஜான் மாக்சு என்பவர் தயாரித்த இந்த படத்தை, உதயநிதி ஸ்டாலினும் கல்பாத்தி அகோரமும் வெளியிட்டனர்.

57

கிராமத்து ஆண் மற்றும் பெண்ணின் காதல் கதையை, தனித்துவமாக இப்படம் வெளிப்படுத்தி இருந்தது.  பல பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற இந்த படம் 58வது தென்னிந்திய பிலிம்பேர் விருதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதும், இப்படத்தில் நடித்தமைக்காக தம்பி ராமையாவிற்கு சிறந்த துணைநடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

67

அதே நேரத்தில், இந்த படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார் நடிகை அமலா பால். இந்த படத்தில் அமலா பால் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது, நாடோடிகள், சீடன் , உள்ளிட்ட பல படங்களில் நடித்த, அனன்யா தானாம்.

77

இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்ததாலும், அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக இருந்ததாலும் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டதாம், இந்த தகவல் 11 ஆண்டுகளுக்கு பின் தற்போது வெளியாகியுள்ளது.

click me!

Recommended Stories