தமிழரை திருமணம் செய்ய ஆசைப்படும் ராஷ்மிகா..! ஏன் தெரியுமா?

First Published | May 16, 2021, 3:51 PM IST

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பரபரப்பான நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழர் ஒருவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறி உள்ளத்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

கன்னட திரையுலகில் அறிமுகமான ஐந்து வருடங்களுக்குள், தெலுங்கு, தமிழ் மற்றும் தற்போது பாலிவுட் திரையுலகிற்கும் சென்று விட்டார் ராஷ்மிகா.
தனது திறமையான நடிப்பு, கியூட் ரியாக்ஷன்ஸ், அழகு, அளவான கவர்ச்சி என அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து தனக்கென தனி இடத்தை உருவாக்கி விட்டார்.
Tap to resize

சமீபத்தில், பாட்ஷா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் “டாப் டக்கர்” ஆல்பம் பாடல் அதிக நபர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது.
மேலும் தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் மூலம் அறிமுகமான இவரை, அடுத்தடுத்த பல படங்களில் கமிட் செய்ய பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருவதாக, கோலிவுட் திரையுலகில் பரவலாக பேச்சு அடிபட்டு வருகிறது.
அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ராஷ்மிகா தமிழர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளவே ஆசைப்படுவதாக தெரிவித்திருந்தார்.
அதற்கு இது தான் காரணமாம்... அதாவது "தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் தமிழ் நாட்டின் உணவு வகைகள் அவரை வெகுவாக கவர்ந்து விட்டதாம். தமிழ் உணவுகளை மிகவும் நேசிப்பதாகவும், அதில் அது அறுசுவை இருக்கிறது. எனவே நான் ஒரு தமிழரை திருமணம் செய்து கொண்டு தமிழ் நாட்டு பெண்ணாக மாறிவிடுவேன் என தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!