விஸ்வநாத் அண்ட் சன்ஸ் vs மகுடம் பாக்ஸ் ஆபிஸ்... வசூலில் செஞ்சுரி அடித்த சூர்யா; கிளீன் போல்டு ஆன விஷால்...!

Published : Aug 17, 2026, 08:44 AM IST

Vishwanath and Sons vs Magudam Box Office : சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் விஷால் நடிப்பில் வெளிவந்துள்ள மகுடம் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

PREV
15
Vishwanath and Sons vs Magudam Box Office

சூர்யா மற்றும் மமிதா பைஜு இணைந்து நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பாக்ஸ் ஆபிஸில் கவனம் ஈர்த்து வருகிறது. ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட் அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக படத்தின் வசூலும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Vishwanath and Sons Review : சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ

25
முதல் இரண்டு நாட்களிலேயே ரூ.100 கோடி

சூர்யாவின் முந்தைய படங்களில் இருந்த ஆக்‌ஷன் மாஸ் அம்சங்களிலிருந்து மாறுபட்டு, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஜாலியான கதைக்களத்துடன் உருவாகியிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மமிதா பைஜுவின் நடிப்பும் இளம் ரசிகர்கள் மற்றும் ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் தாக்கமாக படம் வெளியான இரண்டாவது நாளிலேயே உலகளவில் ரூ.100 கோடி வசூலை கடந்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. சூர்யா கெரியரில் அதிவேகமாக 100 வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையை இப்படம் படைத்துள்ளது.

35
3-வது நாளில் தொடர்ந்த வசூல் வேட்டை

முதல் நாளில் இப்படம் இந்திய அளவில் ரூ.15.35 கோடி வசூலித்ததாகவும், இரண்டாவது நாளில் ரூ.22.25 கோடியை குவித்ததாகவும் கூறப்படுகிறது. மூன்றாவது நாளில் மொத்தம் 4,876 காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில், ரூ.20.55 கோடி வசூல் செய்துள்ளது. முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது சுமார் 7.6 சதவீதம் குறைந்திருந்தாலும், தொடர்ந்து இரண்டாவது நாளாக ரூ.20 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பது படத்தின் வலுவான பாக்ஸ் ஆபிஸ் நிலையை காட்டுகிறது. 3 நாட்களின் முடிவில் இந்தியாவில் இப்படத்தின் மொத்த வசூல் ரூ.67.22 கோடியாக இருப்பதாகவும், ஓவர்சீஸில் ரூ.43 கோடி வசூல் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் உலகளாவிய வசூல் ரூ.110.22 கோடியை எட்டியுள்ளதாக சாக்னில்க் தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மூன்றாவது நாளில் தமிழகத்தில் ரூ.9.50 கோடியும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.9.50 கோடியும், கர்நாடகாவில் ரூ.2.90 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் விமர்சனங்கள் காரணமாக, அடுத்தடுத்த நாட்களிலும் வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

45
‘மகுடம்’ படத்தின் நிலை என்ன?

இதற்கிடையே விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்துக்கு போட்டியாக ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியான விஷாலின் ‘மகுடம்’ திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரமும் வெளியாகியுள்ளது. ‘ஈட்டி’ மற்றும் ‘ஐங்கரன்’ படங்களை இயக்கிய ரவி அரசு, இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் இயக்குநராக இணைந்திருந்தார். படத்தின் கதை மற்றும் திரைக்கதை பணிகளிலும் அவர் ஈடுபட்டிருந்த நிலையில், சில காரணங்களால் பின்னர் அவர் இப்படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு நடிகர் விஷால் திரைக்கதையில் மாற்றங்களை செய்து படத்தை இயக்கியுள்ளார்.

Magudam Review : இயக்குநராக ஜெயித்தாரா விஷால்? மகுடம் ட்விட்டர் விமர்சனம் இதோ

55
மகுடம் வசூல் நிலவரம்

வெளியானது முதல் ‘மகுடம்’ படத்திற்கு நெகடிவ் விமர்சனங்களே அதிகம் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. அதன் தாக்கம் பாக்ஸ் ஆபிஸிலும் பிரதிபலித்துள்ளதாக தெரிகிறது. சாக்னில்க் தளத்தின் தரவுகளின்படி முதல் மூன்று நாட்களில் உலகளவில் இப்படம் சுமார் ரூ.2.10 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருபுறம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ தொடர்ந்து ரூ.20 கோடிக்கும் மேல் தினசரி வசூல் செய்து ரூ.110 கோடி கிளப்பில் நுழைந்துள்ள நிலையில், மறுபுறம் ‘மகுடம்’ வசூலில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories