பிரவீன் கே இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் ஆர்யன் திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'ஆர்யன்'. இப்படம் அக்டோபர் 31 அன்று திரையரங்குகளில் வெளியானது. இதன் தெலுங்கு பதிப்பு நவம்பர் 7 அன்று திரையரங்குகளில் வெளியாகும். 'ஆர்யன்' மூலம் விஷ்ணு விஷால் மீண்டும் ஒருமுறை போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் பிரவீன் கே இதை இயக்கியுள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் செல்வராகவன் ஆகியோர் விஷ்ணு விஷாலுடன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஷ்ணு சுபாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
24
ஆர்யன் திரைப்படத்தின் வசூல்
ஆர்யன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. 'ஆர்யன்' திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஒரு கோடி ரூபாய் நிகர வசூல் செய்துள்ளதாக வரும் தகவல்கள், சமீபத்திய தோல்விகளில் இருந்து விஷ்ணு விஷால் மீண்டு வந்துள்ளார் என்பதைக் காட்டுகிறது. பல்வேறு ட்விஸ்ட்டுகள் நிறைந்துள்ள இப்படத்தில் எஃப்.ஐ.ஆர் படத்தின் இயக்குனர் மனு ஆனந்தும் இணை எழுத்தாளராக பணியாற்றி இருக்கிறார். இப்படத்தை விஷ்ணு விஷாலின் விவி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.
34
விஷ்ணு விஷால் கைவசம் உள்ள படங்கள்
விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து சூப்பர் ஹிட்டான 'எஃப்ஐஆர்' படத்தின் இரண்டாம் பாகம் வரவுள்ளது என்ற செய்தியும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மனு ஆனந்த் இயக்கிய இந்தப் படத்திற்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுதவிர ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கிய இரண்டு வானம் என்கிற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார் விஷ்ணு விஷால். அப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'லால் சலாம்' படத்தில்தான் விஷ்ணு விஷால் கடைசியாக முக்கிய வேடத்தில் திரையில் தோன்றினார். விஷ்ணு விஷால் நாயகனாக நடித்த 'கட்டா குஸ்தி' படம் மாபெரும் வெற்றி பெற்றது. செல்ல அய்யாவு இயக்கிய இப்படம், கிராமப்புற பின்னணியில் அமைந்த ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாகும். ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்த இப்படத்திற்கு ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்த இப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது.