தமிழ் திரையுலகில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருபவர் விஷால், இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கும் போது, அந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் தான் திருமணம் செய்துகொள்வேன் என கூறி இருந்தார். பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அந்தக் கட்டிடம் கட்டி முடிக்க 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் அந்த கட்டிடத்தின் பணிகள் முடியவில்லை. இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தான் சொன்னதுபடி நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கும் வரை திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார் விஷால். அவருக்கு தற்போது 47 வயது ஆகிவிட்டது.
24
விஷால் - சாய் தன்ஷிகா காதல்
நடிகர் சங்க கட்டிட பணிகள் முடிய உள்ள நிலையில், நடிகர் விஷால் தனது காதலி பற்றிய அறிவிப்பை அண்மையில் வெளியிட்டார். அதன்படி தான் நடிகை சாய் தன்ஷிகாவை காதலிப்பதாக விஷால் அறிவித்தார். இருவரும் யோகிடா என்கிற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஜோடியாக கலந்துகொண்டு தங்கள் காதலைப் பற்றியும், திருமணம் பற்றியும் அறிவித்தனர். அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் 29-ந் தேதி தனது பிறந்தநாள் அன்று தங்கள் திருமணம் நடைபெற இருப்பதாக விஷால் அறிவித்திருந்தார். இதையடுத்து விஷால் - சாய் தன்ஷிகா ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்து வந்தன.
34
தள்ளிப்போகும் விஷால் திருமணம்
ரெட் ஃபிளவர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய நடிகர் விஷாலிடம் திருமணம் பற்றிய கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு 9 வருஷம் தாக்குப்பிடித்துவிட்டேன், இன்னும் 2 மாசம் தான். அதற்குள் நடிகர் சங்க கட்டிடம் தயாராகிவிடும். ஆகஸ்ட் 29ந் தேதி என்னுடைய பிறந்தநாள் அன்று நல்ல செய்தி வரும். தற்போது நடிகர் சங்க கட்டிட பணிகளை முடிக்க ஓடிக்கொண்டிருக்கிறேன். அந்த கட்டிடத்தில் முதல் திருமணம் என்னுடையது தான், ஏற்கனவே புக் செய்துவிட்டேன் என்று விஷால் கூறினார். இதன்மூலம் ஆகஸ்ட் 29ந் தேதி அவரின் திருமணம் நடைபெறாது என்பதை சூசகமாக அறிவித்துள்ளார் விஷால்
நடிகர் விஷால் ஆகஸ்ட் 29-ந் தேதி என அறிவித்துவிட்டு தற்போது திருமண தேதியை தள்ளிவைத்துள்ளதற்கு நடிகர் சங்க கட்டிட பணிகள் தான் காரணம். அது முடிய சற்று தாமதம் ஆவதால், அவை முழுவதுமாக முடிந்த பின்னர் அங்கு தன்னுடைய திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார் விஷால். மேலும் ஆகஸ்ட் 29-ந் தேதி தன்னுடைய திருமண தேதி அல்லது நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா குறித்த அறிவிப்பை விஷால் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சங்க கட்டிடத்திற்காக 9 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் காத்திருக்கும் விஷாலின் செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.