இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்று பதக்கங்களையும், பரிசுகளையும் ஜிகே ரெட்டி பெற்றுள்ளார். இதனை மிகவும் பெருமையோடு விஷால் தந்தையின் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில்... ’உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றும், உங்களை விட எங்களுக்கு உந்துதல் சக்தி உடைய நபர் வேறு கிடையாது... இந்த வயதிலும் நீங்கள் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் பதக்கங்களையும் வாங்குவது மிகப்பெரிய சாதனை. உங்களை நினைத்து எங்களுக்கு மிகவும் பொறாமையாக இருக்கிறது’ என்றும் தெரிவித்துள்ளார்.