Valimai Movie : விசில் தீம் மூலம் ‘வலிமை’ படத்தின் மொத்த கதையும் லீக்கானது- அந்த வீடியோவில் இதை கவனிச்சீங்களா?

Ganesh A   | Asianet News
Published : Dec 22, 2021, 05:58 PM IST

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

PREV
18
Valimai Movie : விசில் தீம் மூலம் ‘வலிமை’ படத்தின் மொத்த கதையும் லீக்கானது- அந்த வீடியோவில் இதை கவனிச்சீங்களா?

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

28

குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.

38

அஜித்தின் தாயாக ஜெயசுதா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். இதுதவிர மற்றொரு முக்கிய கதாபாத்திரமான அஜித்தின் தம்பி வேடத்தில் ராஜூ ஐயப்பா நடித்துள்ளார்.

48

அமராவதி படத்தில் அஜித்தின் நண்பராக நடித்த பானு பிரகாஷின் மகன் தான் ராஜூ ஐயப்பா என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பெயருக்கு ஏற்றார்போல் இப்படத்திற்கு மேலும் வலிமை சேர்த்திருப்பது யுவன் தான்.

58

அவரின் இசை இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் பல்வேறு பேட்டிகளில் தெரிவித்திருந்தனர். நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும், திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றி உள்ளனர். 

68

இப்படி பலமான கூட்டணியில் உருவாகி உள்ள வலிமை படத்தின் கதை என்னவென்று தற்போது வெளியாகி இருக்கும் தீம் மியூசிக் வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி இப்படத்தில் நாயகன் அஜித் ரா ஏஜண்டாக இருப்பது தெரியவந்துள்ளது. வில்லன் கார்த்திகேயா சாத்தான் ஸ்லேவ் (அடிமை) ரைடரஸ் என்கிற கொடூரமான பைக் ரேஸிங் கேங்கின் தலைவனாக இருக்கிறார் .

78

இந்த கேங் பல்வேறு சமூக விரோத செயல்களையும், கொலை சம்பவங்களையும் செய்கிறது. இவர்கள் ஹிட்லரின் கருத்தை பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். தீரன் படத்தில் எப்படி பவாரியா கேங் என்கிற திருட்டு கும்பலை மையமாக வைத்து கதை அமைத்திருந்தாரோ, அதேபோல் இப்படம் சாத்தான் ஸ்லேவ்ஸ் என்கிற பைக் ரைடர்ஸ் கேங்கை மையமாக வைத்து உருவாக்கி உள்ளார் இயக்குனர் வினோத்.
 

88

இவர்களை ரா ஏஜெண்டான அஜித் எப்படி கண்டுபிடிக்கிறார். அவர்களை அஜித் தன் வலிமையால் அடக்குவதே வலிமை படத்தின் கதைக்களம். இதில் குடும்ப செண்டிமெண்ட்டும் உள்ளது. இதுதவிர படத்தில் 6 ஸ்டண்ட் காட்சிகள் உள்ளதாம். குறிப்பாக பைக் சேஸிங் தொடர்பான சண்டைக் காட்சியை ரசிகர்களை வெகுவாக கவரும் என்கின்றனர்.

click me!

Recommended Stories