Dhruva Natchathiram movie : சைலன்டாக துருவ நட்சத்திரம் பட பணிகளை தொடங்கிய விக்ரம்... ரிலீஸ் எப்போ தெரியுமா?

Ganesh A   | Asianet News
Published : Mar 08, 2022, 06:38 AM IST

Dhruva Natchathiram movie : துருவ நட்சத்திரம் படத்தின் டப்பிங் பணிகளும் வேகமெடுத்து உள்ளன. விக்ரம் தற்போது டப்பிங் பேசி வருகிறார். இதனால் விரைவில் இதன் இறுதிக்கட்ட பணிகள் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.

PREV
15
Dhruva Natchathiram movie : சைலன்டாக துருவ நட்சத்திரம் பட பணிகளை தொடங்கிய விக்ரம்... ரிலீஸ் எப்போ தெரியுமா?

2017-ல் தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம்

தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குனராக வலம் வருபவர் கவுதம் மேனன். இவர் கடந்த 2017-ம் ஆண்டு விக்ரம் உடன் கூட்டணி அமைத்து துருவ நட்சத்திரம் என்கிற படத்தை தொடங்கினார். இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கியில் தொடங்கி பல்வேறு நாடுகளில் நடந்தது. இப்படத்தில் விக்ரமுடன் ராதிகா, திவ்யதர்ஷினி, ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

25

மீண்டும் கவுதம் - ஹாரிஸ் கூட்டணி

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்க முக்கிய காரணம் கவுதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி தான். வாரணம் ஆயிரம் படத்திற்கு பின் இவர்கள் இருவரும் சுமார் 7 ஆண்டுகளாக பணியாற்றாமல் இருந்து வந்தனர். அவர்கள் இருவரும் இப்படம் மூலம் மீண்டும் இணைந்தனர்.

35

ரஜினி தான் பர்ஸ்ட் சாய்ஸ்

இப்படத்தின் கதையை முதலில் ரஜினியிடம் தான் கூறினாராம் கவுதம் மேனன். ஆனால் அவர் இதற்கு செவிசாய்க்காததால் விக்ரம் வசம் சென்றது துருவ நட்சத்திரம். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த 2017-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், அதன்பின்னர் பல்வேறு சிக்கல்களை சந்தித்தது இப்படம்.

45

நிதி நெருக்கடி

இப்படத்தை கவுதம் மேனன் தான் முதலில் தயாரித்து வந்தார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம், வெளிநாட்டில் படப்பிடிப்பு என படத்தின் பட்ஜெட் நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே சென்றதால் நிதி நெருக்கடியில் சிக்கினார் கவுதம். இதனால் இப்படத்தின் பணிகள் முடங்கிப்போயின. பின்னர் ஐசரி கணேசன் வசம் இப்படம் சென்றதை அடுத்து மீண்டும் பணிகள் வேகமெடுக்க தொடங்கின.

55

ஜூன் மாதம் திரையில்...

தயாரிப்பாளர் மாற்றத்துக்கு பின் ஒரு வழியாக படத்தை எடுத்து முடித்த கவுதம் மேனன் சில பேட்ச் ஒர்க்குகளை மட்டும் சென்னையில் நடத்த உள்ளாராம். மேலும் தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகளும் வேகமெடுத்து உள்ளன. விக்ரம் தற்போது டப்பிங் பேசி வருகிறார். இதனால் விரைவில் இதன் இறுதிக்கட்ட பணிகள் முடிவுக்கு வரும் என கூறப்படுவதால், இப்படத்தை வருகிற ஜூன் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

இதையும் படியுங்கள்... Director Bala Divorce : 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது! மனைவியை விவாகரத்து செய்தார் இயக்குனர் பாலா

Read more Photos on
click me!

Recommended Stories