உயர்நீதி மன்ற தீர்ப்பு குறித்து அச்சத்தில் விக்ரம் படக்குழு...

First Published May 22, 2022, 4:07 PM IST

விக்ரம் படக்குழு விரைவில்  வெளியாகவுள்ள நிலையில் திரையரங்கு குறித்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது குறித்து கவலையில் உள்ளனர்.

vikram movie

கார்த்தியின்  மாஸ்டர் பாடத்தை லோகேஷ் கனகராஜ் தற்போது கமல் நடிப்பில் விக்ரம் படத்தை உருவாக்கியுள்ளார். இதில் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள விக்ரம் படத்துக்கு அனிருத் இசையமைக்க, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

vikram movie

 தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ள உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பட ப்ரோமோஷனுக்காக தென்னக ரயில்களில் விக்ரம் பட போஸ்டரை வரைந்து விளம்பரப்படுத்தியது.. இந்த படம் வருகிற வருகிற ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து  இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் லாஞ்ச்  சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றதை தொடர்ந்து இணையத்தில் வெளியாகி தூள் கிளப்பி வருகிறது..

vikram movie

கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லப்படும் இதில் கமல் ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அதோடு இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் வந்துள்ளதாகவும், மூன்றாம் பாகம் சூர்யா நடிப்பில் உருவாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

vikram movie

இந்நிலையில் திரையரங்கு குறித்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது அதிகாலை காட்சியில் அதிகமான தொகைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாகவும் அதற்குரிய  விற்பனைக்குரிய வரி அரசுக்கு முறையாக செலுத்தப்படுவதில்லை என்றும், தமிழக அரசு சட்ட விதிகளின்படி இரவு 12 மணி முதல் காலை 9 மணி வரை திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிட கூடாது என்றும் ஆனால் விதிகளை மீறி திரையரங்குகளில் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டு வருவதாகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

vikram movie

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து பதிலளிக்க தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.  இதனால் விக்ரம் திரைப்படத்திற்கு அதிகாலை காட்சிக்கான அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக  படக்குழுவினர் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

click me!