மார்பகத்தை சுட்டிக்காட்டி கொச்சையாக கேள்வி கேட்ட நபருக்கு... செருப்படி பதில் கொடுத்த மாளவிகா மோகனன்

Published : May 22, 2022, 03:16 PM IST

Malavika mohanan : நடிகை மாளவிகா மோகனன், தன்னிடம் அத்துமீறி கேள்விகேட்ட நெட்டிசனுக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

PREV
14
மார்பகத்தை சுட்டிக்காட்டி கொச்சையாக கேள்வி கேட்ட நபருக்கு... செருப்படி பதில் கொடுத்த மாளவிகா மோகனன்

மலையாள நடிகையான மாளவிகா மோகனன், கோலிவுட்டில் ரஜினி, விஜய், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து நடித்து தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பேமஸ் ஆனார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் அதில் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

24

இதனிடையே சமீபத்தில் டுவிட்டர் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய மாளவிகா மோகனன் அதில் ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விக்கு பதிலளித்தார். அப்போது விஜய், ரஜினி, தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடித்த அனுபவம் குறித்தும், தனது அடுத்த படங்கள் குறித்த கேள்விக்கும் நேர்த்தியாக பதிலளித்தார் மாளவிகா மோகனன்.

34

வழக்கமாக நடிகைகள் இவ்வாறு கலந்துரையாடும் போது நெட்டிசன்கள் சிலர் அத்துமீறி சில கேள்விகளை கேட்பதுண்டு, சில நடிகைகள் அத்தகைய கேள்விகளை தவிர்த்துவிடுவர். ஆனால் நடிகை மாளவிகா மோகனன், தன்னிடம் அத்துமீறி கேள்விகேட்ட நெட்டிசனுக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

44

அதன்படி நெட்டிசன் ஒருவர், மாளவிகா மோகனனின் மார்பகத்தை பற்றி கொச்சையாக கேள்வி எழுப்பினார். இதனைப் பார்த்து கோபமடைந்த மாளவிகா, சோசியல் மீடியாவில் சில ஆண்களின் அடாவடித்தனம் ஓவராக உள்ளது, அதை நினைத்து நானும் திகைத்துப் போனேன்’ என பதிலடி கொடுத்துள்ளார். அவ்வாறு கேள்வி கேட்ட நெட்டிசனை ரசிகர்களும் சாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... துபாய் மெயின் ரோட்டில் பளீச் என தொடை தெரிய போஸ் கொடுத்து... கிளாமருக்கு கிரீன் சிக்னல் காட்டிய பிரியங்கா மோகன்

click me!

Recommended Stories