திரையில் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! விஜய் - த்ரிஷா விவகாரத்தில் பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் காட்டம்!

Published : Mar 10, 2026, 08:58 PM IST

Vikram Bhatt comment on Vijay Trisha Relationship: விஜய் மற்றும் த்ரிஷாவின் உறவு குறித்து பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் கருத்து தெரிவித்துள்ளார். அது என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
Vikram Bhatt comment on Vijay Trisha Relationship

விஜய் மற்றும் த்ரிஷாவின் உறவு குறித்து தமிழ் சினிமாவில் பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களும் கருத்து தெரிவிப்பது என்பது சகஜம் தான். ஆனால், அதையும் தாண்டி பாலிவுட் அளவில் விஜய் மற்றும் த்ரிஷா குறித்து பேசப்படுவது சற்று ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது. அப்படி என்ன பேசப்படுகிறது, யார் பேசியிருக்கா என்பது பற்றி முழுவதுமாக பார்த்து தெரிந்து கொள்வோம்.

25
Bollywood Director Vikram Bhatt supports Thalapathy Vijay

தனது கணவருக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக கூறி விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். பெயர் சொல்ல விரும்பாத நடிகையுடன் கடந்த சில வருடங்களாக அவர் உறவில் இருப்பதாக கூறியிருந்தார். தேவைப்பட்டால் அவரது பெயரையும் குறிப்பிடுவேன் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தி பரபரப்பானது.

35
Vijay Trisha personal life controversy 2026

இது ஒரு புறம் இருக்க, விவாகரத்து வழக்கு முடியும் வரையில் தன்னை நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும் என்று 2ஆவதாக ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த சூழலில் தான் இப்போது பாலிவுட் இயக்குநரான விக்ரம் பட் விஜய் மற்றும் த்ரிஷாவிற்கு ஆதரவாக பேசியிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அது என்னவென்றால், விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் நடித்த படங்கள் நமக்கானவை தான். ஆனால், அவர்களது வாழ்க்கை நமக்கானது அல்ல என்று குறிப்பிட்டிருக்கிறார்.

45
Vikram Bhatt Interview about South Actors

இன்னும் தெளிவாக பார்க்கையில், நாளுக்கு நாள் விஜய் மற்றும் த்ரிஷா பற்றிய பேச்சுகள் தான் அதிகம் வந்து கொண்டே இருக்கின்றன. அவர்களை பற்றிய வதந்திகள் உண்மையாக இருந்தால் நான் ஒன்று சொல்லிக்கொள்ள வேண்டும். அதாவது, எனக்கு வலியும் வேதனையும் கொடுத்தது சிறை வாழ்க்கைதான். மனிதன் தவறு செய்யக் கூடியவன். எங்கு சந்தோஷம் கிடைக்கிறதோ அதைத்தான் நம் மனம் தேடி செல்லும். சந்தோஷத்திற்காக ஒன்று சேர்ந்த மனதானது, அதே சந்தோஷத்திற்காக வெளியிலும் அதை தேடி செல்கிறது. விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் எதையும் மறைக்காமல் அதனை கண்ணியமாக வெளிப்படுத்தி விட்டார்கள். தங்களது காதலை கண்ணியமாக வைத்து வெளிக்காட்டிவிட்டார்கள். இது ஒன்றும் பாவச் செயல் அல்ல.

55
விஜய் த்ரிஷா தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை

விஜய் மற்றும் த்ரிஷாவின் படங்கள் நமக்கானது தான். ஆனால், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையானது நமக்கானது அல்ல. அவர்களுக்கு அவர்களுக்காக வாழ்வதற்கும், காதலிப்பதற்கும் உரிமை இருக்கிறது என்று அழுத்தம், திருத்தமாக கூறியுள்ளார். ஆனால், இங்கு விஜய்யைப் பற்றி அதிகம் பேசப்படுவதற்கு முக்கிய காரணம், அவர் ஒரு அரசியல் தலைவர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories